Law in Tamil இணையத்தளமானது தமிழ் மக்களுக்கு சட்டம் சம்பந்தமான தகவலை கொண்டு சேர்பதற்காகவும், இதன் மூலம் சட்ட விழிப்புணர்வை ஏட்படுத்தும் நோக்கதுடன் 2018இல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த இணையத்தளம் சட்டத் தொடர்பான செய்திகள், சட்டமாற்றங்கள் தொடர்பான அறிவுப்புக்களை தமிழில் செய்தி வடிவிலும் கட்டுரைகள் வடிவிலும் பிரசுரிக்கின்றது. தற்பொழுது பிரித்தானிய சட்டங்கள் பற்றிய செய்திகளையே முன்னுரிமைப்படுத்துகின்றது.
ஆங்கில மொழி தெரிந்திருத்தல் ஒரு திறனாக இருந்தாலும், ஆங்கில மொழி தெரிந்ததால் மட்டும் ஒருவர் அறிவாற்றலை பெற்றவராக கொள்ள முடியாது. நமது சமுதாயத்தில் அறிவுத்திறன் மிகுந்தவர்கள் இருந்தாலும் அவர்களுக்கு ஆங்கில மொழித்திறன் போதிய அளவு இல்லாத காரணத்தால் சட்ட அறிவை முழுமையாக பெற முடியாமல் இருக்கிறது. அதன் காரணமாக பல இடர்களுக்குள் தள்ளப்படுகின்றார்கள். மேலும் அவர்களுடைய நாளாந்த வாழ்க்கையிலும், வேலை, சுயதொழில் மற்றும் அரசு சேவைகளை பெற்றுக்கொள்வதிலும் சட்ட அறிவு போதாமையினால் தங்கள் உரிமைகளை சமரசம் செய்யும் நிலைமையும் ஏற்படுகின்றது.
ஆதலால் அறிவே அதிகாரத்துக்குக்கான திறவுகோல் என்ற கூற்றுக்கு இணங்க தமிழ் பேசும் மக்கள் இந்த இணையத்தளத்தின் மூலம் பயனடைவீர்கள் என்று நம்புகிறோம்.