Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

ABOUT EDITOR

திரு ஜெயராஜன் விஸ்வலிங்கம் (Mr Jeyarajan Visvalingam) அவர்கள் ஒரு பிரித்தானிய சட்டத்தரணி. அவர் ஜே விஷ்வா சொலிஸிட்டர்ஸ் (Jay Visva Solicitors, London) என்ற சட்ட நிறுவனத்தின் முதன்மை சட்ட தரணி ஆவார்.

தனது இளங்கலை சட்டப் படிப்பை (LLB (Hons)) கோவென்ட்ரி பல்கலைக்கழகத்திலும் (Coventry University) தனது சட்டப் பயிற்சிப் படிப்பை (Legal Practice Course ) மேற்கு லண்டன் பல்கலைக்கழகத்திலும் (University of West London) பயின்றார். சட்டத்துறை கல்விக்கு முன்னதாக இவர் ஆங்கில முதுகலை பட்டத்தையும் (MA in English) பெற்றிருந்தார்.

திரு ஜெயராஜன் விஸ்வலிங்கம் அவர்கள் கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக பின்வரும் சட்ட துறைகளில் வல்லுநராக உள்ளார்:

1. குடிவரவுச் சட்டம் (Immigration, Asylum and Nationality Law )
2. சொத்து சம்பந்தமான தகராறு சட்டம் (Property Law )
3. வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருப்போருக்கான சட்டம் (Landlord and Tenant Law)
4. குடும்பச் சட்டம் (Family Law)
5. வணிகச் சட்டம் (Commercial Law)
6. கட்டிடத் திட்டமிடுதல் சட்டம் (Planning Law)
7. தொழிலார் சட்டம் (Employment/ Labour Law )
8. மதுபான உரிமம் வழங்கும் சட்டம் (Liquor Licensing)
9. உரிமையியல் வழக்கு (Civil Litigation) மற்றும்
10. விருப்பாவணம் மற்றும் மெய்ப்பித்த விருப்பாவணப்படி சட்டம் (Wills and Probate )