Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

அகதிகளின் குடும்ப உறுப்பினர்கள் சட்ட ரீதியாக அகதிகள் அல்ல

ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உடன்படிக்கை ஆனது அகதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு வகையில் மறைமுகமாக வழித் தோன்றலாக அகதி அந்தஸ்தை வழங்குவதாக பொருள் கொள்ளக் கூடாது என மேன் முறையீட்டு நீதிமன்றம் கருதுகின்றது.  இதன் விளைவாக ஐக்கிய இராச்சியத்தின் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அகதியின் குடும்ப உறுப்பினர் என்ற வகையில் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டவர் அவர் உடைய அகதி அந்தஸ்து வாபஸ் பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பத்தில் அகதி உடன் படிக்கையின் கீழ் உள்ள பாதுகாப்பில் இருந்து அவர் பயனடைய முடியாது. 

இங்கு உள்ள சட்ட பிரச்சனை ஆனது மிக நுட்பமான முறையில் உடன்படிக்கையை பொருள் கொள்ளும் விதம் ஆகும். ஆனால் நடைமுறை ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட அகதிகள் உடைய குடும்ப உறுப்பினர்களுக்கு இது பல விதமான விளைவுகளை ஏற்படுத்தும். உண்மையாக, அகதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு உள்துறை அமைச்சு தவறாக அகதி அந்தஸ்தை வழங்குவதாக மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அகதிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஒரு குற்றச் செயல் தொடர்பாக குற்றம் சாட்டப் பட்டால்

Secretary of State for the Home Department v JS (Uganda) [2019] EWCA Civ 1670  என்ற வழக்கில் ஒரு உகண்டா நாட்டைச் சேர்ந்தவர் தனது தாய் உடன் இணைந்து கொள்ள ஐக்கிய இராச்சியத்தில் அனுமதிக்கப்பட்டதினால் மீள தாய் உடன் இணைந்து கொள்ள வேண்டும் என அக்கறை தெரிவித்தார். தாய் ஏற்கனவே அகதிகள் உடன்படிக்கையின் கீழ் அகதியாக அங்கீகரிக்கப் பட்டு இருந்தார்.

JS இற்கு ஐக்கிய இராச்சியத்தில் அவரும் ஒரு அகதி என்ற ரீதியில் தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. எவ்வாறு இருப்பினும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவருக்கு உகண்டா நாட்டில் துன்புறுத்தப்படும் அபாயம் உள்ளதா என்பது பற்றி எந்த ஒரு மதிப்பீடும் செய்யப்படவில்லை. 

JS பின்னர் ஒரு கடுமையான குற்றத்திற்காக குற்றத் தீர்ப்பளிக்கப் பட்டு தண்டிக்கப் பட்டார். அத்துடன் உள் துறை அமைச்சு அவரை நாடு கடத்த முடிவு எடுத்தது. இந்த சந்தர்ப்பத்தில் அகதிகள் உடன்படிக்கையின் கீழ் JS ஒரு அகதி என இன்னமும் நம்பி இருந்தனர். ஆகவே அவர் ஒரு பாரதூரமான குற்றச் செயலை செய்து இருந்ததால் அவர் உடைய அகதி அந்தஸ்தை முடிவுக்கு கொண்டு வருமாறு முன்மொழிந்தனர். அந்த வழக்கு முதல் படி தீர்ப்பாயம் (First Tier Tribunal) அடுத்து மேல் தீர்ப்பாயம் (Upper Tribunal) என்ற ரீதியில் முன்னேறியது.

மேன் முறையீட்டு நீதி மன்றத்திற்கு இந்த வழக்கு வந்த பொழுது உள்துறை அமைச்சு ஆனது தன் உடைய நிலைப்பாட்டை மாற்றி JS இற்கு ஒரு பொழுதும் அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கவில்லை எனக் குறிப்பிட்டது.

குடும்ப உறவினர்கள் அகதி அந்தஸ்தை கொண்டு இருக்கவில்லை

JS தனக்கு அகதி உடன்படிக்கையின் கீழ் அந்த வரையறையை பூர்த்தி செய்பவர் என்ற அடிப்படையில் அகதி அந்தஸ்து நேரடியாக தனக்கு வழங்கப்படவில்லை என்பதை ஏற்றுக் கொண்டு இருந்தார். அதற்குப் பதிலாக. ஒரு அகதிக்கான வரையறையை தனது தாய் பூர்த்தி செய்ததால் அவருக்கு வழித் தோன்றல் (derivative) அகதி அந்தஸ்தை உள்துறை அமைச்சு வழங்கியதாக வாதிட்டார். JS மேலும் வாதிடுகையில் அகதிகள் உடன்படிக்கை ஆனது பரந்த அளவிலும் குறித்த நோக்கத்திற்கு பயன்படுகின்ற வகையிலும் பொருள் கொள்ளப் பட வேண்டும். அகதிகள் உடன்படிக்கை வாசகத்தில் குடும்ப உறுப்பினர்களுக்கு வழித் தோன்றலாக எந்த ஒரு அகதி அந்தஸ்தும் வழங்கப் படும் என வெளிப்படையாக குறிப்பிடா விட்டாலும் நீதிமன்றம் ஆனது அந்த அந்தஸ்தை அது உள்ளடக்கி உள்ளது என பொருள் கொள்ள வேண்டும். அகதிகள் உடன்படிக்கையின் சட்டப் பிரிவுக் கூறு 32 மற்றும் 33 இல் குறிப்பிடப் பட்டு உள்ள விதிவிலக்குகளில் அமைந்தால் ஒழிய அவர் வழித் தோன்றலாக அகதி அந்தஸ்தை கொண்டு இருப்பதாகவும் அதனால் அகதி அந்தஸ்தை கொண்ட தான் தனது சொந்த நாட்டிற்கு வற்புறுத்தலாக திருப்பி அனுப்ப படுவதில் இருந்து பாதுகாக்கப் பட வேண்டும் எனவும் JS கூறினார்.

மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த வாதத்தை நிராகரித்தது அத்துடன் அகதிகள் உடன் படிக்கையின் கீழ் JS இற்கு ஒரு பொழுதும் அகதி அந்தஸ்து கொடுக்கப் படவில்லை எனக் குறிப்பிடுவது சரியானது எனத் தீர்ப்பளித்தது.

அகதிகள் உடன்படிக்கையின் சட்டப்பிரிவுக் கூறு 1A (2) உடைய அர்த்தம் ஆனது மிகத் தெளிவானது அத்துடன் எந்த விதமான ஐயத்திற்கும் உரியது அல்லஅகதி உடன்படிக்கையின் கீழ் அகதி எனப்படுபவர்துன்புறுத்தப்படுவார் என நன்கு அறியப் பட்ட அச்சம்கொண்ட ஒரு நபர் அதாவது ஒரு தனிச்சிறப்பாக அல்லது தனிப்பட்ட விதத்தில் துன்புறுத்தப் படுவார் என்ற அச்சம். அது இன்னும் ஒருவர் இடம் இருந்து வழித் தோன்றலாக வருவது இல்லை அல்லது இன்னும் ஒருவரிடம் தங்கி இருப்பதில்லை. அகதி என்ற பதத்தின் வரையறை ஆனது அகதி உடன்படிக்கையின் கீழ் பொருந்தக் கூடிய ஆட்களை மட்டும் விபரிப்பதை முற்றாக நோக்கமாக கொண்டு உள்ளது.

நியாயமான எதிர்பார்ப்பு வாதம் தோல்வி

இன்னும் ஒரு மேன் முறையீட்டில் JS தான் ஐக்கிய இராச்சியத்தில் வருகை தந்த பொழுது அவருக்கு அகதி அந்தஸ்து வழங்கப்பட்டு இருந்ததால் தனக்கு அகதி உடன் படிக்கையின் கீழ் ஆதாயம் பெற ஒரு நியாயமான எதிர்பார்ப்பு இருப்பதாக வாதிட்டார். ஆனால் நீதிமன்றம் ஆனது இந்த விடயம் ஆனது அறிவியல் சார்ந்தது என்று கூறியது. JS அகதி உடன்படிக்கை பாதுகாப்பு பெற்றிருப்பதை நிலை நாட்டி இருந்தாலும் உகண்டாவில் அரசியல் சூழ் நிலைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளதால் உள்துறை அமைச்சு இன்னமும் சட்ட ரீதியாக அகதி அந்தஸ்தை முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் நியாயமான எதிர்பார்ப்பு வாதம் ஆனது இன்னமும் குடும்ப மீள் இணைவு கொள்கையின் கீழ் அகதி அந்தஸ்து வழங்கப் பட்டவர்களுக்கு திறந்த நிலையில் தான் உள்ளது.

தனிப்பட்ட ரீதியில் தஞ்சம் கோருவதற்கான முக்கியத்துவம்

குடும்ப மீள் இணைவின் கீழ் ஐக்கிய இராச்சியத்தில் குடும்ப உறுப்பினர்கள் தங்க அனுமதிக்கப்படும் பொழுது உள்துறை அமைச்சின் புதிய வழிகாட்டியில் தற்பொழுது அகதிகள் உடைய குடும்ப உறுப்பினர்கள் அகதிகளுக்கு உரிய உரிமைகளை ஒத்த உரிமைகளை அனுபவிக்கும் நன்மை பெற்றாலும் கூட அவர்கள் அகதிகள் அல்ல என்பது தெளிவாக குறிப்பிடப் பட்டு உள்ளது. இந்த வழிகாட்டி ஆனது குடும்ப மீள் இணைவுக் கொள்கையின் கீழ் ஐக்கிய இராச்சியத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனுமதிக்கப்பட்டு இருந்தாலும் பொருத்தமான சந்தர்ப்பங்களில் அவர்கள் உடைய சொந்த அகதி அந்தஸ்துக்கான கோரிக்கையை வேறாக மேற் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகின்றது. கடந்த காலத்தில் மீள் இணைவின் கீழ் அகதி அந்தஸ்து வழங்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் தற்பொழுது தங்களுக்கு அத்தகைய அகதி அந்தஸ்து இல்லை என அறிந்து கொண்டால் அவர்கள் இன்னமும் உள்நாட்டு சட்டத்தின் கீழ் தங்களுக்கு இன்னமும் அகதி உடன்படிக்கையின் கீழான உரிமைகளுக்கு உரித்தானவர்கள் என நியாயமான எதிர்பார்ப்பு அவர்களுக்கு உள்ளது என்ற அடிப்படையில் அந்த உரிமைகளைக் கோரலாம்.

Credit: freemovement.org.uk

Mrs L Balarajan

Solicitor

Jay Visva Solicitors

Tel: 020 8573 6673

Post a Comment