Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

அடிசன் லீ (Addison Lee) இக்கு எதிரான மிதிவண்டி விரைவுத் அஞ்சல் செய்வோருக்கு சார்பான தொழிலாளர் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் அதிரடி தீர்ப்பு

அடிசன் லீ நிறுவனம் தனியார் வாடகை வாகன போக்கு வரத்து தொழிலை (mini-cab ) லண்டன் போக்குவரத்து நிறுவனத்தின் (Transport for London) அனுமதியோடு 40 வருடமாக தொழில் நடத்துவதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தில் பொதிகள்-அஞ்சல் செய்யும் சேவையும் நடைபெறுகிறது. பல தமிழர்களும் தனியார் வாகன சேவைகளில் (mini-cab) ஈடுபட்டுள்ளனர். இந்த அஞ்சல் சேவையில் ஒரு பகுதியாக ஏறத்தாழ 500க்கும் மேலான மிதிவண்டி விரைவு-அஞ்சல் பணி செய்வோர் (Bicycle Couriers) பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் இந்த நிறுவனத்தில் பெரும்பாலும் மத்திய லண்டன் பகுதியில் பணியாற்றுகிறார்கள்.

இந்த குறிப்பிட்ட வழக்கில் இருசக்கர வண்டி விரைவு-அஞ்சல் செய்யும் தொழிலாளி ஒரு வாரம் விடுமுறை ஓய்வு எடுத்திருந்தார். ஆனால், அடிசன் லீ அவருக்கு ஒரு வாரத்துக்குறிய ஊழியம் செலுத்தவில்லை. எனவே அவர் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் (Employment Tribunal ) வழக்கு தொடர்ந்தார்.

அவர் தங்களுக்கு மட்டும் வேலை செய்யும் ஒரு தொழிலாளர்/ஊழியர் அல்ல (not an employee) மேலும் அவர் ஒரு சுய தொழில் செய்பவர் (self-employed/independent contractor) என்ற வாதத்தை அடிசன் லீ முன் வைத்தது. அதனால் இரு சக்கர வண்டி தொழிலார்களுக்கு தமது ஊழியருக்கு கொடுக்கப்படும் விடுமுறைக்குரிய ஊதியம் செலுத்த வேண்டியதில்லை என்றும் வாதிட்டது.

தொழிலார் தீர்ப்பாயம் குறிப்பிட்டதாவது, தொழிலாளி அடிசன் லீ குறிப்பிட்ட நேரத்துக்கு வேலை செய்பவராகவும் மத்திய லண்டன் பகுதியில் சேவை செய்பவராகவும் இருக்க வேண்டும். மேலும் அவர் அடிசன் லீ இன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். அதே வேளையில் அவர் தனது சொந்த தொழிலை செய்யவில்லை. அடிசன் லீ தமது சேவைக்கு பணம் அறவிடல் போன்ற விடயங்களிலும் பாதுகாப்பாக செயல்ப்பட்டது. ஆகவே அவர் ஒரு ஊழியரே என்று தீர்ப்பளித்தது.

அடிசன் லீ மேல் முறையீட்டு தீர்ப்பாயத்துக்கு முறையிட்டது, அது இரண்டு விதமான அடிப்படையில் தனது வாதத்தை வைத்தது. 1. மேல் முறையிட்டாலார் வேலை ஒதுக்கப்பட்டவுடன் அவர் அதை ஒத்துக்கொள்ள வேண்டியதில்லை, மேலும் தொழிலாளி பூச்சிய மணித்தியால உடன்படிக்கை மட்டுமே செய்துள்ளார் என்றும் குறிப்பிட்டது. ஆனால் வேலை ஒதுக்கப்பட்ட நேரத்தில் முதலாளிக்கு வேலை செய்ய வேண்டும் அதனால் இரு சக்கர அஞ்சல் தொழிலாளி ஒரு ஊழியரே (worker) என்று தீர்ப்புக்குரியது.

இப்பொழுது அடிசன் லீ உயர் நீதிமன்ற மேல்முறையீட்டு நீதி மன்றத்தில் இந்த தீர்ப்பிக்கு எதிராக (Court of Appeal) மேல் முறையீடு செய்துள்ளது என அறியப்படுகின்றது.

Post a Comment