Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

இங்கிலாந்தில் வாடகை தாரரை வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான தற்காலிக தடை நீடிப்பு

இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக பிரித்தானிய அரசு  வாடகை தாரரை வீட்டை விட்டு வெளிற்றுவதை  31 மார்ச் 2021 வரை தடை செய்துள்ளது. இதை நடைமுறைப்படுத்தும் முகமாக The Public Health (Coronavirus) (Protection from Eviction) (England) (No. 2) Regulations 2021 (‘the Regulations’) என்ற துணை சட்டத்தை இயற்றியுள்ளது.

இந்த புதிய சட்டத்தின் பிரகாரம் வாடகைதாரரை பெப்ரவரி 22, 2021 இல் இருந்து மார்ச் 31, 2021 வரை வீட்டை விட்டு வெளியேற்றும் முகமாக ஒரு சில விதிவிலக்குகளை தவிர வேறு காரங்களுக்காக வெளியேற்ற சட்ட அறிவிப்பு பத்திரத்தையோ அல்லது நீதிமன்ற அதிகாரி மூலம் வீட்டை மீள வீட்டு உரிமையாளரிடம் கொடுக்கும்படி வழங்கப்பட்ட நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த முடியாது.

பின்வருவன ஒருவரை வீட்டை விட்டு  வெளியேற்றுவதற்கான விதிவிலக்குகள் ஆகும்-இந்த காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான நீதிமன்ற நடவடிக்கையையும் மேலும் சட்ட அறிக்கை பத்திரத்தை வாடகை தாரரிடம் கொடுக்க முடியும்.                                 

அதிகப்படியான வாடகை நிலுவையில் உள்ள சூழலில்-அதாவது குறைந்தது  ஆறு மாத வாடகை நிலுவையில் உள்ள சூழலில் (To evict occupants where ‘substantial’ rent arrears have accrued. The arrears must equate to 6 months’ rent arrears)

அத்துமீறி வீட்டு உரிமையாளரின் அனுமதி இன்றி வசிப்பவர்களை வெளியற்றுவதற்கு (To evict trespassers)

சமூகத்துக்கு எதிரான செயல்பாட்டில் ஈடுபடுபவர்களை வெளியேற்றுவதற்கு (To evict occupants on the grounds of anti-social behaviour)

 தொல்லை செய்பவர்கள் அல்லது பொய்யான தகவல்களை கொடுத்ததற்காக (To evict occupants on the grounds of nuisance or false statements) மற்றும்

வாடகை தாரர் மரணித்து உள்ள சூழலில் வீட்டை மீளப்பெறுவதற்காக (Where a property is unoccupied following the death of a tenant)

 வீட்டை விட்டு வெளியேற்றுவதற்கான நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது, இருப்பினும் மேலே உள்ள விதிவிலக்குகள் பொருந்தவில்லை என்றால் வீட்டை விட்டு வெளியற்றுவதற்கான உத்தரவை 2021 ஏப்ரல் மாத முற்பகுதிவரை வரை நடைமுறைப்படுத்த முடியாது

Post a Comment