Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

ஏழை மற்றும் பணக்கார மாணவர்களுக்கு இடையே கல்வி தரத்தில் 50 வருட இடை வெளி!

பிரித்தானிய செய்திகள்

தற்பொழுது பிரித்தானிய அரசால் வெளியிடப்ப பட்ட தகவலின் படி ஏழை மாணவர்களுக்கும் பணம் படைத்த மாணவர்களுக்கும் இடையே ஆன இடைவெளியை நிரப்புவதற்கு 50 வருடங்கள் எடுக்கும் என்று கூறப்படுகிறது. இந்த போக்கு 2011இல் இருந்தது போல் தொடருமானால் ஏழை மாணவர்கள் பணக்கார மாணவர்களின் கல்வித் தரத்தை எட்டுவதற்கு 2070 வரை காத்து இருக்க வேண்டும் என்று இந்த தரவுகள் கூறுகிறது.

இந்த வருடம் 51% ஏழை மாணவர்களே எதிர்பார்த்த தரத்தை (expected level) பெற்று இருக்கிறார்கள் அதே வேளை 70% பணக்கார மாணவர்கள் எதிர்பார்த்த கல்வித் தரத்தை பெற்று இருக்கிறார்கள், 19 சதவிகித புள்ளிகள் வேறுபாடு. இந்த தரவுகள் மாணவர்கள் தமது ஆரம்பப் பள்ளியில் ஆறாம் ஆண்டு முடிவில் இடம்பெறுகின்ற SATS எனப்படும் தேர்வுகளின் அடிப்படையில் முடிவு செய்யப்படுகிறது. இந்த தரப்படுத்தல் ஆனது கணிதம் மற்றும் ஆங்கில பரீச்சைகளில் மாணவர்கள் எடுக்கின்ற புள்ளிகளை வைத்து முடிவு செய்யப்படுகின்றது

ஏழை பெற்றோரின் பிள்ளைகளை அவர்கள் பெறுகின்ற pupil premiumத்தை வைத்தே கணக்கிடப் படுகிறது. இது வருமானம் குறைந்த பெற்றோருக்கு அரசால் கொடுக்கப்படும் உதவித் தொகையயை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. இப்படி pupil premium பெறும் குழந்தைகள் பள்ளிகளில் இலவச உணவு பெறுவதற்கு தகுதி ஆனவர்கள்.

உங்கள் பிள்ளைகளின் பாடசாலைகளின் தரத்தை அறிந்து கொள்ள இந்த இணைப்பை அழுத்தி உங்கள் post code பதிவு செய்யவும்.

Source: பிபிசி

Post a Comment