Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

ஐக்கிய இராச்சியத்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய பெற்றோர்களுக்கான தகவல்.

தற்போதைய  ஐரோப்பிய ஒன்றிய  சட்டத்தினின்  கீழ் (Free movement of Goods and Services ) ஐக்கிய  ராச்சியத்திற்குள்  நுழை யும்  ஐரோப்பியர்கள்,  ஐரோப்பிய  ஒன்றியத்தின் உடன்படிக்கையின் படி வேலை செய்ய வருபவர்களாகவே  இருக்கவேண்டும், இல்லாவிடில் அவர்கள் ஐக்கிய ராச்சியத்தில்  பொதுவாக வசிக்க முடியாது.

ஐக்கிய ராச்சியத்துக்குள்  நுழையும் ஐரோப்பிய  ஒன்றியத்தை சேர்ந்த குடிமக்களுக்கு 6 மாத  கால தற்காலிக வதிவிட உரிமை வழங்கப்படுகிறது. இந்த 6 மாத  வதிவிடஉரிமையை இவர்கள் மேலும்  நீடிக்காவிட்டால் அவர்கள் தமது நாட்டிக்கு திரும்பி போகவேண்டிய  நிலை உருவாகும். இந்த தற்  காலிக வதிவிட உரிமை நீடிக்கப்படுவதட்கு அவர்களின் வேலை வாய்ப்புகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்  மேலும் அதற்கான அத்தாட்சிகள் சமர்ப்பிக்க வேண்டும்.  ஐரோப்பிய  ஒன்றியத்தின் உடன்படிக்கையின் படி வேலை வாய்ப்புக்கள்  உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே அவர்கள்  இந்த நாட்டில் வசிக்க அனுமதி வழங்கப்படும்.  இல்லாவிட்டால் அவர்களின் வதிவிட உரிமை விண்ணப்பம் நிராகரிக்கபடும். இதனால் ஐரோப்பிய பிரஜையை  சார்ந்தோர்  முக்கியமாக  கணவன், மனைவி, பிள்ளைகள், பெற்றோர் அனைவரும் தமது  நாட்டிக்கு திரும்பி செல்லவேண்டிய நிலை உருவாகும்.

M S (British Citizen : EEA appeals ) Belgium [2019]UKUT  என்ற வழக்கின் தீர்ப்பு மேலே குறிப்பிட்ட சூழலில் உள்ள ஐரோப்பிய பிரஜைகளை சார்ந்தோருக்கு சார்பான தீர்பாய் உள்ளது.  அதாவது ஐக்கிய ராச்சியத்தில் வாழ்ந்து வரும் ஐரோப்பிய  நாட்டு சிறுவர்கள் ஐரோப்பிய மனித உரிமை சட்டத்தின் 8வது  சரத்தின் கீழ் பெற்றோர், பாதுகாவலர் வேலை இல்லாமல் இருந்தாலும் அல்லது  உள்நாட்டு திணைகளத்தின் ஆவணங்கள்  அவர்களிடத்தில் இல்லை என்றாலும் ஐக்கிய இராச்சியத்தில்  வாழும் சிறுவர்கள் அவர்களின் கட்டுப்பாட்டிக்குள் இருப்பதனால் அவர்கள் மனித உரிமை சரத்து 8 (Article 8) கீழ் ஐக்கிய இராச்சியத்தில் சட்டப்பூர்வமாக வாழ்பவர்களாக இருக்கிறார்கள் என்று தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.

இதில் முக்கியமாக  பெற்றோரின் கட்டுப்பாட்டிக்குள் வாழும் சிறுவர்கள் பாடசாலைக்கு படிக்கும்  போதோ இல்லாவிட்டால் உயர் கல்வி கற்கும்  போதோ உள்ளூர் திணைக்களத்திடம் இருந்து ஒருவித முரண்பாடான நடவடிக்கைகளும் இந்த சிறுவர்களுக்கு எதிராக   எடுக்கப்படவில்லை. ஆதலால் அவர்கள் UK இல்  சட்ட  முறையான குடியுரிமையுடன்தான்  வாழுகிறார்கள் என ஐரோப்பிய மனித உரிமை சட்டத்தின்  8வது சரத்தை மேல் கோள் காட்டி இந்த வழக்கில் முடிவு  எடுக்கப்பட்டுள்ளது. 

இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ளுவது  என்னவென்றால்,  ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் வேலை செய்யாவிட்டாலும் அல்லது  ஒழுங்கான ஐக்கிய இராச்சியதில் வாழ்வதற்கு  வதிவுரிமை வைத்திராவிட்டாலும் அவர்களது குழந்தைகள் சுய உரிமையுடன் சட்டப்பூர்வமாக (in their own right) ஐக்கிய இராச்சியதில் தொடர்ந்து வாழமுடியும் என்பதே ஆகும்

By Gino Thomas-Thuraiayah

Jay Visva Solicitors: 02085736673

Post a Comment