
ஐரோப்பிய நிரந்திர வதிவுரிமை திட்டத்தின் கீழ் 1.5 மில்லியன் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய நிரந்திர வதிவுரிமை (EU Settlement Scheme ) திட்டத்தின் கீழ் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விண்ணப்பித்துள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் இன்று (12 செப்டம்பர் 2019) அறிவித்துள்ளது.
31 ஆகஸ்ட் 2019 வரை ஐரோப்பிய ஒன்றிய நிரந்திர வதிவிருமை திட்டத்தின் கீழ் சமீபத்திய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களை உள்துறை அலுவலகம் வெளியிட்டதால். ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 1.1 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பதாரர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பதிவுரிமை வழங்கப்பட்டிருப்பதைக் காட்டுகிறது.
ஆகஸ்ட் மாதத்தில் கிட்டத்தட்ட 300,000 பேர் விண்ணப்பித்ததாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இங்கிலாந்தில் தனி நபர்களிடமிருந்து 1.2 மில்லியனுக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் இருந்து வந்த விண்ணப்பங்களிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்பட்டது. பொதுவாக விண்ணப்பங்கள் 1 முதல் 4 நாட்களுக்குள் பரிசீலிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில் 60,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் போலந்து நாட்டவர்களிடமிருந்து அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது ஜூலை மாதத்தில் பெறப்பட்ட எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகம். 1,500 க்கும் மேற்பட்ட உள்துறை அமைச்சின் ஊழியர்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வரும் விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கு பணிபுரிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியதோடு எந்த ஒப்பந்தமும் இல்லாமல் வெளியேறினாலும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் 31 டிசம்பர் 2020 வரை விண்ணப்பிக்க மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.