Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

கட்சிக்காரரின் குடிவரவு விண்ணப்பத்தை சமர்ப்பிக்க தவறிய வழக்கறிஞர் சான்றிதழை இழந்தார்

ப்ராட்போர்ட (Bradford) நகரத்தில் உள்ள  வழக்கறிஞர் ஒருவர் தனது கட்சிக்காரரின் குடிவரவு விண்ணப்பத்தை உரிய நேரத்தில் சமர்ப்பிக்க தவறிய காரணம் உட்பட பல காரணங்களுக்காக அவர் வழக்கறிஞராக பணிசெய்ய ஏதுவாகும் சான்றிதழை சொலிஸிட்டர்ஸ் ஒழுக்காற்ற அதிகார சபை (the Solicitors Regulation Authority) ரத்து செய்துள்ளது.

ஆர் ஜே சொலிஸிட்டர்ஸ் (RJ Solicitors) என்ற நிறுவனத்தை (ஜமீல் என்ற வழக்கறிஞரை) (Ms. Jamil ) பி (பெயர் வெளியிடப்படவில்லை) என்ற கட்சிக்காரர் ஐக்கிய இராச்சியத்தில் தனது டிஸ்கிரேஷனரி (Discretionary Leave) வதிவுரிமை விண்ணப்பத்தை ஜூன் 2015 இல் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இரண்டு வருடமாக உள்துறை அமைச்சகத்திலிருந்து எந்த பதிலும் வராத காரணத்தால் கட்சிக்காரர் வழக்கறிஞரை கேட்டபொழுதெல்லாம் வழக்கறிஞர் உள்துறை அமைச்சு இதுவரை அவரின் விண்ணப்பத்தில் எந்த முடிவும் செய்யவில்லை என்று கடிதம் எழுதியுள்ளார். இருப்பினும் 2018 இல் விண்ணப்பத்தை வழக்கறிஞனர் உள்துறை அமைச்சிடம் சமர்ப்பிக்கவில்லை என்ற உண்மை வெளியான பொழுதும் தான் விண்ணப்பம் செய்ததாக தொடர்ந்து கூறிவந்துள்ளார். இவ்வாறு நேர்மை அற்று (Dishonest) பொய் கூறிய காரணத்துக்காக வழக்கறிஞரின் சான்றிதழ் ரத்து செய்யப்பட்டதை சரியான முடிவு தான் என்று “Solicitors Disciplinary Tribunal” தீர்ப்பாயம் சொலிஸிட்டர்ஸ் ஒழுக்காற்று அதிகார சபையின் (the Solicitors Regulation Authority) முடிவை உறுதி செய்துள்ளது.

பிரித்தானியாவில் வழக்கறிஞராக பணிபுரிபவர்கள் பொய் கூற முடியாது. அவ்வாறு கூறினால் அவர்கள் வழக்கறிகஞராக பணியாற்றும் தகுதியை இழக்கும் நிலை ஏற்படலாம். இது மட்டுமல்லாமல் வழக்கறிகஞர்களுக்கு பலவேறு ஒழுக்க கட்டுப்பாடுகளும், சட்ட கடமைகளும் உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ஒரு வழக்கறிஞர் தனது கடைமையை கவனக்குறைவாக செய்தால் அவர் தனது காப்புறுதி மூலம் கட்சிக்காரருக்கு நட்ட ஈடு செலுத்தவேண்டும். தற்பொழுது உள்ள சட்ட தேவையின் படி குறைந்த பட்சம் 2 மில்லியன் பிரித்தானிய பவுண்டுகள் காப்புறுதியை ஒரு வழக்கறிஞர் நிறுவனம் பெற்று இருக்க வேண்டும்.

குறிப்பு: இந்த வழக்கறிஞர் மீது, மேலே குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளை விட வேறு குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment