Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

காணாமல் போனவர்களின் உறவினர்கள் சொத்துக்களை பராமரிக்க புதிய சட்டம்.

The Guardianship (Missing Persons) Act 2017 என்ற சட்டம் ஜூலை மாதம் 31 ஆம் திகதி 2019 இங்கிலாந்தில் சட்டமாக  வரவுள்ளது. இதை the Ministry of Justice 28 ஜூன் 2019 அன்று உறுதி செய்திருந்தது. இந்த சட்டத்தின் பயனாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் காணாமல் போனவரின் சிறந்த நலன் கருதி முடிவுகள் எடுக்க முடியும். காணாமல் போன உறவினர் 90 அல்லது அதற்கு மேலான நாட்களுக்கு மேலாக கண்டு பிடிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

இதற்கு முன்னர் the Presumption of Death Act 2013 என்ற சட்டத்தின் கீழ் காணாமல் போனவர்கள் இறந்ததாக அறிவிக்கப்பட்டால் மட்டுமே அவர்களுடைய சொத்துக்களை நிர்வகிக்க முடியும். புதிய சட்டம்  உறவினரை ஒரு பாதுகாவலராக (Guardian) நியமிக்கும்.

இப்படிப் பட்ட சூழலில் உள்ளவர்கள் உயர் நீதிமன்றத்துக்கு (High Court ) விண்ணப்பம் செய்யவேண்டும். வெற்றிகரமாக விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டால் Office of the Public Guardian இதை மேற்பார்வை செய்யும்.

இதன் இந்த சட்டம் துயரத்தில் உள்ள உறவினர்களுக்கு பெரும் சுமையை குறைக்கும் என்று பலர் கருது தெரிவித்துள்ளார்கள்.

Post a Comment