Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

காவல் நிலையத்தில் உங்கள் அடிப்படை உரிமைகள் என்ன?

பிரித்தானிய செய்திகள்

Middle-aged defendant or witness counselled by the lawyer to sign an official statement in front of the prosecutor, during a criminal investigation in the police station

நீங்கள் குற்றம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அல்லது வேறு ஒருவரால் குற்றம் செய்தவர் என்று குற்றம் சாட்டப்பட்டால் உங்களை காவல் துறையினர் கைது செய்யலாம். அப்படிப்பட்ட சமயங்களில் உங்களுடைய உரிமைகள் என்ன என்று தெரிந்து கொள்வது அனைவருக்கும் அவசியமாகிறது.

இந்தக் கட்டுரைத் தொடரின் முதல் பகுதி மேல்குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் உங்கள் உரிமைகள் என்னவென்று குறிப்பிடுகின்றது.

ஸ்கொட்லாந்து சட்டமானது வேறுவிதமாக செயல்படும்.

Arrested man with cuffed hands wearing shirt with United Kingdom flag. Unrecognisable male person in jeans with handcuffs held in police station for being suspected of a crime.

நீங்கள் கைது செய்யப்பட்டால் பொதுவாக காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு சோதனை இடப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்படுவீர்கள். உங்களை சிறையில் அடைப்பதற்கு முன்னர் உங்கள் உடைமைகள் பாதுகாப்பாக காவல் நிலையத்தில் வைக்கப்படும்.

நீங்கள் கைது செய்து அடைக்கப்படும் பொழுது உங்களுக்கு பொறுப்பாக உள்ள காவல் அதிகாரி (custody officer ) உங்கள் சட்ட உரிமைகளை உங்களுக்கு விளக்க வேண்டும். உங்கள் உரிமைகள் ஆவன:

Drunk asian woman feels dizzy after too much drinking alcohol and driving car

1. இலவச சட்ட ஆலோசனை;

2. நீங்கள் எங்கே இருக்கின்றிர்கள் என்று உங்களுக்கு விருப்பியவர்க்கு தெரிவிப்பதற்குறிய உரிமை;
3. தேவைப்பட்டால் மருத்துவ உதவி பெறுவதற்கு;
4. காவல்துறையினர் பின்பற்றவேண்டிய சட்ட புத்தகத்தை பார்வையிட(‘Codes of Practice’);
5. உங்கள் சட்ட உரிமை எழுதப்பட்ட அறிக்கையை வாசிப்பதற்கும் (notice in your language)  மேலும்  உங்களுக்கு தேவையான மொழியில் அதை பெற்றுக்கொள்வதற்கும் உரிமையுண்டு. உங்களுக்கு ஆங்கிலம் பேச தெரியவில்லை என்றால் உங்கள் மொழியில் மொழிபெயர்ப்பாளரை பெற்றுக்கொள்வதற்கும் சட்டத்தில் உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளது.இந்த உரிமை அறிக்கையில் எடுத்துக்காட்டாக எந்த இடை வெளியில் உணவு பரிமாறப்படும், கழிவறையை பயன்படுத்துதல் போன்ற தகவல்கள் உள்ளடக்கப்பட்டு இருக்கும்.

 

நீங்கள் 18 வயதுக்கு உற்பட்டவராயின் அல்லது வலிமை குன்றியவாறாக இருந்தால் ஒரு வயதுவந்த பொறுப்பான நபர் அல்லது பாதுகாவலர் முன்னிலையில் சோதனை மற்றும் விசாரணை செய்வதற்கும் உரிமை உண்டு.

Young beautiful blonde woman Criminal Mug Shots.

எப்படிப்பட்டவர் வயதுவந்த பொறுப்பான நபராக இருக்க முடியும்?

1 பெற்றோர், பாதுகாவலர் அல்லது கவனிப்பாளர்;
2 சமூக சேவையாளர்;
3 உறவினர்கள் அல்லது 18 வயதிற்கு மேற்பட்ட நண்பர் மற்றும்
4. பதினெட்டு வயதிற்கு மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்

காவல்துறையிரினால் கேள்விகேட்டும் பொழுது உங்களின் உரிமைகள்:

காவல்துறையினரால் நீங்கள் விசாரிக்கப்படும் பொழுது அவர்கள் கேள்விகேற்கின்ற பொழுது கேள்வி அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை ஆயினும் நீங்கள் காவல்துறையினரால் கேற்கின்ற கேள்விகளுக்கு ஒழுங்காக பதில் கூறவில்லை என்றால் பின்னர் உங்களுக்கு எதிரான ஆதாரம் கிடைக்கும் பொழுது உங்களக்கு அதற்குரிய விளக்கம் கொடுக்கின்ற உரிமையை இழக்கக்கூடும்.

தொடரும்

Post a Comment