Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

குடிவரவு ஆலோசகர்கள் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டியது!

UK Law

குடும்ப நீதி மன்ற ஆவணக்களை அந்த நீதி மன்றத்தின் அனுமதி இல்லாமல் குடியவரவு விடயங்களில் பாவிக்க வேண்டாம். குடிவரவு வழக்கறிஞ்சர்களுக்கு ஒரு எச்சரிக்கை !!!

திரு நஸ்ருல்லா முர்சலின் என்பவர் Gull Law Chambers Limited என்னும் வழக்கறிஞ்சர் நிறுவனத்தில் சட்ட உதவியாளராக (Paralegal) வேலை செய்து கொண்டிருந்தவர். இவருக்கு இந்த வருடம் ஆடி மாதத்தில் 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஏனென்றால் இவர் குடும்ப நீதிமன்ற ஆவணங்களை அந்த நீதி மன்றத்தின் அனுமதி இல்லாமல் குடிவரவு புகலிட தீர்ப்பாயகத்திற்கு (Immigration and Asylum First-tier Tribunal ) சமர்ப்பித்ததே அனுப்பியதே காரணமாகும். ஆனால் மேல் முறையீட்டு நீதி மன்றம்(Court of Appeal ) அவருடைய தண்டனையை சட்ட நுணுக்க காரணகளுக்காக புரட்டாதி 3 ஆம் நாள் தள்ளுபடி செய்து விட்டது.

இந்த வழக்கில் குடிவரவு வழக்கறிஞ்சர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் குழந்தைகள் சம்பந்தமான ஆவணங்களை குடிவரவு விடையங்களில் குடும்ப நீதி மன்றத்தின் அனுமதி இல்லாமல் பாவிக்க கூடாது என்பதுவே. இப்படிப்பட்ட ஆவணங்களை பயன்படுத்துவதால் நீதி மன்றத்தை அவமதித்தல் என்னும் குற்றத்தை இழைக்கிறார்கள். இந்த குற்றம் கடுமையான விளைவுகளை ஏற்படுத்த கூடியது.

இந்த வழக்கில் குடிவரவு நீதி மன்ற நீதிபதி(Immigration Judge) குடும்ப நீதி மன்ற (Family Court) ஆவணங்களை பெற்றவுடன் அவற்றை குடும்ப நீதி மன்ற நீதிபதியின் கவனத்திற்கு சமர்ப்பித்தார். அவர்களே இந்த விடையத்தை நன்கு ஆராய்ந்த பின் இதில் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் சம்பந்தமான நடவடிக்கை எடுக்கப்படுவது சரியான என்ற முடிவை குடும்ப நல நீதி மன்றத்திடம் உப்படைத்து விட்டார்.

இதன் பின் குடும்ப நீதிபதி கூறியதாவது: அதாவது, திரு நஸ்ருல்லா முர்சலின் தன்னுடைய நடத்தையினால் (supplying Family Court documents to Immigration and Asylum First -Tier Tribunal without the Family Court’s permission) குடும்ப நீதி மன்ற நெறிமுறைகளையும் விதிகளையும் மீறி உள்ளார். ஆகவே தன்னுடைய( judgement) கீழ் அதிகப்பட்ட தண்டனையாக ஆறுமாத சிறை தண்டனையை இவருக்கு விதிக்கிறேன் என்று கூறியது அதே வேளையில் அந்த ஆறு மாத தண்டனையை இடைநிறுத்தப்பட்ட தண்டனையாக்கி( suspended sentence ) அந்த ஆறு மாத தண்டனை காலத்துக்குள் வேறு எதாவது பிரச்சினைகள் ஏற்படாமல் இருந்தால் ஆறு மாத இறுதியில் அந்த தண்டனை காலாவதியாகி விடும் எனவும் கூறியிருந்தார். மேலும் திரு நஸ்ருல்லா முர்சலின் இன் மேற்பார்வையாளர் தலைமை சட்டவல்லுநர் Mr. Gull க்கு Law Societyல் தன்னைப்பற்றி முறையீடு செய்யும்படி வழிகாட்டியும் உ ள்ளார்.

இந்த தீர்ப்பை மேல் முறையீட்டு நீதி மன்றம் புரட்டாதி 3 ல் தள்ளுபடி செய்தது
இந்த தீர்ப்பு சில சட்ட முறை நுணுக்கங்களினால் தள்ளுபடி செய்யப்பட்டதே தவிர மற்றும்படி இந்த வழக்கு குடிவரவு சட்டவல்லுனர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவே இருக்கிறது.

Post a Comment