Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

குடிவரவு, குடியுரிமை விண்ணப்பதார்களுக்கு ஆங்கில பரிசைத் தொடர்பாக டிரினிட்டி கல்லூரி வெளியிட்ட தகவல்

குடிவரவு மற்றும் குடியுரிமை பெறுவதற்காக விண்ணப்பம் செய்வபர்கள் ஐக்கிய ரசியத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியுரிமை சட்டங்களுக்கு இணங்க ஆங்கில மொழி தேர்விவில் சித்தியடைய வேண்டும்.

அவ்வாறு பரிட்சையில் பங்கு பெறுபவர்கள் உள்துறை அமைச்சால் வேண்டப்பட்ட அடையாள ஆவணத்தை  எடுத்துச் செல்லுதல் அவசியமாகும். இருப்பினும் தற்பொழுது கோவிட் பாதிப்பின் காரணமாக பலர் தமது கடவுச் சீட்டு மற்றும் அரசால் ஏற்றுக்கொள்ளக்கூடிய அடையாள பத்திரங்களை புதுப்பிக்க முடியாத சூழலில் இருப்பார்கள். அவ்வாறு ஒருவர் காலாவதியான அரசால் குறிப்பிடப்பட்ட ஆவங்களை வைத்திருப்பாராயின் அவருக்கு பின்வரும் தகவல் பொருத்தும்.

அரசால் குறிப்பிடப்பட்ட அனைத்து ஆவங்களும்:

 – மார்ச் 1, 2020 பின்னர் அடையாள பத்திரங்கள் காலாவதியானால் அவற்றை தேர்வுக்கு பயன்படுத்த முடியும்

 – தேர்வுவில் 30 ஏப்ரல் 2021 வரைக்கும் பங்குபெற முடியும்

– அவ்வாறு பதிவு செய்பவர்கள் தமது அடையாள ஆவணத்தின் முடிவு திகதியை 01/01/2999 என்று பதிவு செய்ய வேண்டும்- காலாவதியான ஆவணத்தின்  திகதியை பயன்படுத்தினால் இணையத்தளம் அதை ஏற்றுக்கொள்ளாது.

மே மாதம் 1 திகதிக்கு 2021 பின்னர் காலாவதியான அடையாள ஆவணங்களை பயன்படுத்த முடியாது.

குறிப்பு: காலாவதியான வேறு ஒரு அடையாள ஆவணம் இருக்குமாயின் காலாவதியான ஆவணத்தை பயன்படுத்துவதை விடுத்து காலாவதியாகாத ஆவணத்தை விண்ணப்பதாரி பயன்படுத்த வேண்டும்.

Post a Comment