Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

சொத்துத்துகள் வாங்க கொடுக்கும் உதவி கடனை எவ்வாறு பாதுகாத்து கொள்ளலாம்? ஒரு அறிமுக கட்டுரை சுருக்கம்.

law: England and Wales:

இது ஒரு சட்ட  பத்திரம் ( Deed of Trust )-இந்த பத்திரத்தினால் வீடு வாங்கத்  கொடுக்கப்படும்   உதவி பணத்தொகையை எப்படி பாதுகாக்கலாம் என்பதை தற்போது பார்ப்போம்

வீடு வாங்கும் போது அநேகம் பேர் தம்முடைய குடும்ப அங்கத்தவர்களுடைய உதவியை நாடுவது வழக்கம். உண்மையாகப் பார்க்கப்போனால் ‘அம்மாவுடையவும் அப்பாவுடையவும்  வங்கி’ (Mum and Dad  Bank) தான்  மிகப்பெரிய உதவிப் பணம் வழங்குபவர்களாக ( Mortgage  Lenders) ஐக்கிய இராட்ச்சியத்தில் திகழ்கிறார்கள்.

பொதுவான  சந்தர்ப்பங்களில் பெற்றோர்/உறவினர்  தம்முடைய பிள்ளைகள் வீடு வாங்கும்  முயற்சியில் இறங்குவதற்கு  உதவியாக பண உதவிசெய்கிறார்கள். இந்த தொகை  அவர்களின்  வீட்டுக்கு  வைப்பு பணமாக  ஆக மாறுகிறது. இதை பல பேர்கள் அவர்களுக்கு அடமான கடன் (mortgage) கிடைத்தபின் தான் இவ்வகையான பணத்தை  சேமிப்பதற்கு எவ்வளவு வருடங்கள் எடுக்கலாம் என்று உணர்கிரார்கள்.  

பெற்றோர்கள்/உறவினர் இவ்வாறு கொடுக்கும் உதவிப்  பணம் வீடு வாங்கும் அனைவருக்கும் கொடுக்கிறார்கள் என்பதை அவர்கள் ஞாபகத்தில் கொள்ள  வேண்டும். இதனால் வரும் விளைவுகளை அவர்கள் சிந்தித்து பார்க்க வேண்டும். அதாவது அவர்களுடைய பிள்ளைகள்   வீட்டை இன்னோருவருடன் சேர்ந்து வாங்கும் போது அதாவது அவருடைய துணைவருடனோ  அல்லது நண்பரோடோ வாங்கும் போது சில பிரச்சினைகள் வர வாய்ப்புகள் உண்டு .      

வீடு வாங்கும் போது நல்ல நிலையில் இருக்கும் உறவு முறை காலம் செல்ல மாறக்கூடிய  சூழ்நிலை ஏற்படலாம்.   அவர்களுடைய உறவு முறைகளில் (boyfriend /girlfriend /friend) முறிவு ஏற்பட்டால் என்ன விளைவுகள் ஏற்படலாம் என்பதை  அவர்கள் தெரிந்திருக்க  வேண்டும் .

கொடுக்கப்பட்ட உதவிப்பணம் வாங்கிய வீட்டிற்குள் தான் போடப்பட்டு இருக்கிறது. இதற்கு ஒரு முறையான ஒப்பந்தம்   இல்லாவிட்டால் வீட்டு  உரிமையளர் இருவரும் அந்த பணத்தைக் சமமாக பிரித்து அதன் பலனை அனுபவிப்பார்கள். பணத்தைக் கொடுத்த குடும்பத்தவருக்கு அப்பணத்தை மீளப்பெற முடியாமல் போய் விடும்.  

எவ்வாறு இருந்தாலும் எதிர் காலத்தில் இந்த சட்ட பத்திரம் எந்த  நோக்கத்திற்காக    உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கம் இல்லை என்றால் இந்த சட்ட பத்திரத்தில்  இருக்கும் வரையரைகளுக்கு  ஏற்ப  இரு சாராறும் இணக்கமான ஒரு முடிவு எடுப்பதற்கும்  இது உதவக்கூடிய  ஒரு வழியாகவும் இருக்கலாம்.

பொதுவாக இவ்வாறு இருவர் இணைந்து வாங்கும் போது குறிப்பிட்ட  பகுதிகளை (tenancy in common)  ஒவ்வொவரும்   உரிமை கொள்வற்கும் மற்றும் இருவரும் சரி சமனாக உரிமை கொள்வதற்கும் (joint tenancy ) சட்டத்தில் இடம் உண்டு. இதில் இருவருக்கும் சரி பாதி உரிமை கொள்வது என்று முன்பே தீர்மானித்து இருக்கலாம். சட்டம் செயற்ப்படும் முறையில்  இருவருக்கும்  பொதுவாக சாதாரண சூழ்நிலையில் அரைவாசியாக உரிமை கொள்வதற்கும்  வாய்ப்புகள் உள்ளன.            

தற்போது அந்த  சட்டப்  பத்திரம் ( Deed of Trust ) என்னவென்று பார்ப்போம்.

இந்த பத்திரம் ஒரு சட்ட  ஆவணம் ஆகும்.   இதில் வீடு வாங்குவதற்காக  கொடுக்கப்பட்ட  உதவிப்    பணம்   எவ்வளவு  என்றும் அதை எவ்வாறு  எதிர் காலத்தில் மீளப்பெறலாம் என்பதையும் அப்பத்திரம் உள்ளடக்கியிருக்கும்.  இந்த முறையானது பெற்றோர் / குடும்பத்தாருடைய   பணத்தை ஒரு பாதுகாப்பு அரண் மாதிரி ஒரு வட்டத்திற்குள் வைத்து பாதுகாப்பதாகும். ஏனென்றால் வீடு விற்றாலும், ஒருவர் மற்றவருடைய பங்கை  வாங்கினாலும் அந்த உதவிப்  பணத்தை இந்த பத்திரத்தினால்  மீட்க வாய்ப்புக்கள் உண்டு.    

உதாரணமாக   ராணியும் சீமானும் ஒரு வீடை  வாங்குகிறார்கள். ராணியின் பெற்றோர் £30,000 வீட்டு  வைப்பு பணமாக்க   கொடுக்கிறார்கள் . பின்பு ஒரு   சட்டப் பத்திரம் (Deed of Trust)  செய்யும்படி கேட்கிறார்கள். சில வருட ங்களுக்கு பின் ராணி சீமான் இடையில்  உறவு முறிவு ஏற்பட்டு அவர்கள் வசித்த வீடு விற்கப்படுகிறது. இப்பொழுது  அந்த சட்டப்  பத்திரத்தில்  ( Deed of Trust) உள்ளடக்கப்பட்ட   விதி முறைகள் செயற்பாட்டுக்கு வருகின்றன. அதனால் ராணியின்  பெற்றோர் தம் கொடுத்த £30,000 பெற்று கொள்ள  வாய்ப்பு ஏற்படுகிறது . மீகுதியாக வரும் பணத்தில் ராணிக்கும்  சீமானுக்கும் இடையில் சமனாக பிரிக்கப்படுகின்றது.

சட்ட பத்திரம் ( Deed of Trust) இல்லாவிடில் விற்ற பின் வரும் பணம் அவர்கள் இருவருக்கிடையில் பிரிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கும் அந்த பணத்தில் இருந்து உதவிப்  பணத்தை  திருப்பி செலுத்த வேண்டிய கடமைபாடு இருந்திருக்காது, அதனால் ராணியின் பெற்றோர்/ குடும்பத்தவர் தாம்  கொடுத்த உதவிப்  பணத்தை மீண்டும் கண்டு இருக்கமாட்டார்கள்.

ராணி  தன்னுடைய வீடு விற்ற பணத்தில் இருந்து  தனது பெற்றோரின் பணத்தை திருப்பி கொடுத்திருக்கலாம்.  இதனால்  சீமானை விட குறைவாகவே  ராணிக்கு  பணம்  கிடைக்கப்பெற்று  இருக்கலாம்.   

சட்ட  பத்திரம் ( Deed of Trust) பெற்றோர் / நண்பர்கள், அல்லது குடும்ப அங்கத்தவர்கள்  உதவியாக  கொடுத்த பணத்தை  பாதுகாக்க உதவுகிறது.   நீங்கள் உங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு வீடு  வாங்குவதற்கு பண உதவி செய்வீர்களானால் அல்லது நீங்கள் பண உதவி பெறும்  நிலையில் இருப்பீர்களானால் நீங்கள் இதை முக்கியமாக கவனத்தில் எடுத்திக்கொள்ள வேண்டும். எந்த நேரத்தில், எப்போது இந்த  ஒப்பந்தத்தில் உள்ள விதிமுறைகள்  முக்கியமாக எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரியாது. எதிர் காலத்தில் என்ன  நடக்கும் என்று தற்போது கூறமுடியாது.  ஆகவே  இந்த சட்ட  பத்திரம் ( Deed of Trust) இல்லாமல் செய்யும் முதலீடுகள் எல்லாம் அழிந்து போகலாம் அல்லது பிழையான நபருக்கு நன்மை பயக்கலாம். இந்த முறையான ஓப்பந்தம் இல்லாமல் மோதல்கள்  நீதி மன்றம் வரை செல்லலாம்.   

Disclaimer:

இக்கட்டுரை சட்ட  பத்திரம் ( Deed of Trust)பற்றிய ஒரு   அறிமுகமேயாகும்.  மேலும் விரிவான சட்ட விபரங்கள் தேவைப்படின் ஒரு சுயாதீன சட்ட  ஆலோசனையை (Independent Advice) ஐ பெறவும்.   

Post a Comment