Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

ஜூலை, 24 2018 இல் இருந்து பிரித்தானியாவில் வாழ்கினற ஐரோபியா நாட்டவருக்கு புதிய சட்ட மாற்றம்.

The Immigration (European Economic Area) (Amendment) Regulations 2018 (SI 2018 No. 801) த்தின் மூலம் புதிய சட்டமானது 24 ஜூலை 2018 பிரித்தானியாவில் அமுலுக்கு வருகின்றது. இந்த சட்ட மாற்றமானது பின்வரும் சில மாற்றங்களை கொண்டு வருகின்கிறது.

1. இரட்டை குடியிருமை பெற்றவர்கள், அதாவது ஐரோப்பிய குடிமக்கள் பிரித்தானியாவின் குடியிருமையையும் பெற்றிருந்தால், அவர்கள் தமது ஐரோபிய குடியிருமை அல்லாத உறவினர்களை பிரித்தானியாவுக்கு அழைப்பதாக இருந்தால் அவர்கள் பிரித்தானிய குடிமக்களை போன்றே கடுமையான சட்ட தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று 2012 இல் இருந்து பிரித்தானிய அரசு வலியுறுத்தி வந்தது. இது McCarthy என்ற வழக்கை மையமாகவே வைத்து எடுக்கப்பட்ட முடிவாக இருந்தது. ஆயினும் இந்த சட்டம் விளக்கமானது ஐரோப்பிய சட்டத்துக்கு முரணானது என்று Lounes என்ற வழக்கில் பிரித்தானிய மேல் முறையீட்டு நீதி மன்றம் (Court of Appeal) தீர்ப்பு வழங்கியதால் இப்பொழுது இரட்டை குடியிருமை உள்ள ஐரோப்பிய குடிமக்கள் தமது உறவினர்களை பிரித்தானியாவுக்கு அழைப்பதற்கு கடுமையான தேவைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதில்லை என்ற மாற்றம் 24 ஜூலை 2018இல் அமுலுக்கு வருகிறது. இந்த சட்ட மாற்றமானது, இரட்டை குடியிருமை பெற்றவர்களின் உரிமைகள் பிரித்தானியாவில் வாழ்கின்ற மற்றய ஐரோப்பிய நாட்டவர்களுக்கு இருக்கின்ற உரிமைகளுக்கு சரிசமமானதாக இருக்கும்.

2. சுயதொழில் செய்வோர் தமது வேலையை இழக்கும் பொழுது அவர்கள் தொடர்ந்து இந்த நாட்டில் இருக்கின்ற உரிமையை பெற்றிக்க மாட்டார் என்ற முடிவுகள் பிரித்தானிய உள்துறை அமைச்சால் முன்பு எடுக்கப்பட்டு வந்தது, ஆயினும் இந்த சட்டமாற்றத்தின் மூலம் சுயதொழில் செய்வோர் சில குறிப்பிட்ட தகைமைகளை பெற்றிந்தால் தங்கள் சுயதொழிழை தொடர்ந்து செய்வதில் இடை வெளிகள் ஏட்பட்டாலும் அவர்களும் இந்த நாட்டில் 5 வருடங்களில் நிரந்திர வதிவுருயை பெறமுடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

3. இந்த நாட்டுக்குள் நுழையக்கூடாது (Exclusion மற்றும் Deportation Orders) என்ற கட்டுப்பாடுகள் உள்ளவர்கள் இந்த நாட்டுக்குள் வருவதற்கான விண்ணப்பங்கள் சட்டப்படி செல்லாது என்று உள்துறை அமைச்சால் கருதப்படும்.

4. இந்த நாட்டைவிட்டு விளியேற்றப்படாமல் (Deportation) இருப்பதற்குரிய பாதுகாப்பானது ஐரோப்பிய பிறையைகள் இந்த நாட்டில் சட்ட ரீதியாக ஐந்து வருடங்கள் வாழ்தால் மட்டுமே பெறமுடியும். அதாவது ஐந்து வருடங்கள் தொடர்ந்து வேலை அல்லது படித்தல் போன்ற செயற்ப்பாட்டில் ஈடுபட்டு இருக்க வேண்டும். பத்து வருடங்கள் வாழ்தததால் மட்டும் வெளியேற்றப்படாமல் இருப்பதற்குரிய பாதுகாப்பை பெற முடியாது.
இந்த சட்ட மாற்றமானது ஒரு கடைசியான EEA Regulations இக்கு மேட்கொள்ளப்படுகின்ற சட்ட மாற்றம் என்று கருதப்பகுதிக்கிறது, ஏனெனில் பிரித்தானியா விரைவில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகயிருப்பதால்.

Post a Comment