Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

டொமினோஸ் பீட்ஸா (Dominos Pizza) ஓட்டுநர் “வேலை செய்யும் உரிமை” தொழிலாளர் சட்ட மேல்முறையீட்டில் வெற்றி

இந்த செய்தியானது Afzal v East London Pizza Ltd (t/a Dominos Pizza) (Rev 1) [2018] UKEAT 0265_17_1304 (13 April 2018) என்ற வழக்கை மையமாக வைத்த செய்தியாகும்.

டொமினோஸ் பீட்ஸாவில் ஓட்டுநராக வேலை செய்த பாக்கிஸ்தான் நாட்டை சேர்ந்த நபர் படிப்படியாக முன்னேறி துணை மேலாளராக உயர்வு பெற்று வேலை செய்துவந்தார். வேலை செய்வதற்கான ஆய்வு நடைபெட்ற பொழுது அவர் தனது முதலாளி கேட்ட ஆவணங்களை குறித்த நேரத்தில் முதலாளியிடம் அவர் கொடுக்க வில்ல. பல நாட்கள் கழித்தியே சில ஆவணத்தை அனுப்பி வைத்துள்ளார். மின்னச்சல் மூலம் அனுப்பப்பட்ட ஆவணங்களை திறந்து பார்ப்பதிலும் மேலாளர்களுக்கு சில சிக்கல்கள் இருந்துள்ளது ஆகவே அவரை உடனடியாக வேலையில் இருந்து டொமினோஸ் பீட்ஸா நீக்கியது. இருப்பினும் இடைநீக்கப்பட்ட தொழிலாளி மூன்று நாட்களில் தான் ஐரோப்பிய நாட்டவரை மணம் முடித்தவர் என்றும் தனது விண்ணப்பமானது உள்துறை அமைச்சிடம் பரிசீலனையில் உள்ளதாக கூறி ஆதாரத்தை கொடுத்துள்ளார். ஆயினும் டொமினோஸ் பீட்ஸா அவரின் வேண்டுதலை மீளாய்வு செய்ய மறுத்து விட்டது. இதற்க்கு முக்கிய கரணம் Domino பீட்ஸாவின் எழுதப்பட்ட கொள்கையின் படி ஒருவர் வேலை செய்ய உரிமை இல்லை என்ற காரணத்துக்காக வேலையை விட்டு நீக்கப்பட்டால் அவரை மீண்டும் அந்த இடத்துக்கு சேர்க்க முடியாது. மேலும், தொழிலாளிக்கு வேலை செய்ய உரிமை இல்லை என்ற காரணத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு தொழிலாளி தனது முதலாளிக்கு செய்யும் மேல் முறையீட்டு உரிமையையும் மறுக்கப்பட்டு இருந்தது.

ஆகவே, தொழிலாளி தொழிலாளர் தீர்ப்பாயத்தில் முறையிடடார். ஆயினும் தீர்பாயமானது டொமினோஸ் பீட்ஸா கேண்டுகொண்டதக்கேற்ப குறிப்பிட்ட காலத்துக்குள் தொழிலாளி வேலை செய்யும் உரிமையை உறுதிசெய்யும் ஆவணத்தை கொடுக்காதலாலும், டொமினோஸ் பீட்ஸா உண்மையாக தொழிலாளிக்கு வேலைசெய்யும் அதிகாரம் இல்லை என்று நம்பியதாலும் அவர்கள் எடுத்த முடிவு சரியானதே என்று முடிவு செய்தது.

ஆயினும் தொழிலாளி அத்துடன் நின்று விடாமல் மேல்முறையீடு செய்தார். அவருடைய மேல்முறையீட்டை விசாரித்த மேல்முறையீட்டு தீர்ப்பாயம், டொமினோஸ் பீட்ஸா தொழிலாளிக்கு மேல்முறையீட்டு உரிமையை கொடுத்திருந்தால் கொடுக்கப்பட்ட கால அளவுக்குள் தொழிலாளி தேயையான அவங்களை கொடுத்து இருப்பார். டொமினோஸ் பீட்ஸா தொழிலாளிக்கு அந்த சந்தர்ப்பத்தை கொடுக்க தவறியமையால் தொழிலாளியை திரும்ப சேர்க்க முடியாமல் போனது என்று கூறி

தொழிலாளியை நீக்கியது தவறு என்று கூறி தீர்ப்பளித்தது (procedural unfairness).

வாசகர்கள் இந்த இணைய தளத்தில் உள்ள http://lawintamil.com/2018/07/03/வேலை-செய்யும்-உரிமை-ஆவணத/

இணைப்பில் வெளியிடுட்ட செய்தியை வசித்திருப்பீர்கள். இந்த இரண்டு தீர்ப்பில் இருந்து தெரிய வருவதாவது ஒரு தொழிலாளி வேலை செய்ய உரிமை இல்லை என்ற காரணத்தால் நீக்கப்படும் பொழுது உங்களுக்கு வேலைசெய்வதற்கு அனுமதி இருப்பின் நீங்கள் தொழிலாளர் தீர்ப்பாயத்தில் முறையீடுவதே சரியான முடிவாக இருக்கலாம்.

Post a Comment