
தஞ்சம் கோரும் தமிழருக்கு சார்பாக பிரித்தானிய நீதிமன்ற தீர்ப்பு
தப்பிய தமிழ்க் கைதிகளிற்கு இலங்கையில் ஆபத்து உள்ளது என மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதிப் படுத்தி உள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆனது குடிவரவு தீர்ப்பாயங்கள் (Tribunals) உடைய தீர்ப்புக்களை மீறி தடுத்து வைக்கப்பட்ட தமிழ் புலிகள் இயக்கத்தை சேர்ந்த அங்கத்துவர்கள் தப்பிய பின்னர் இலங்கையில் துன்புறுத்தப்படும் ஆபத்து உள்ளது என்று கண்டறிந்து உள்ளது. RS (Sri Lanka) v Secretary of State for the Home Department [2019] EWCA Civ 1796 என்ற வழக்கில் எந்த ஒரு முன்னைய தீர்ப்பாயமும் இந்த வெளிப்படையான முடிவினை எடுக்காதது மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் உள்ளதைப் போலவே இலங்கையில் யாராவது காவலில் இருந்து தப்பித்தால் அவர்கள் கைது செய்யப்படுவதற்கு ஒரு பிடியாணை பிறப்பிக்கப்படும். அவர்கள் மீண்டும் இலங்கைக்குள் திரும்ப நுழையும் பொழுது அவர்கள் கைது செய்யப்படுவார்கள். இந்த தீர்மானத்தை நாட்டு தகவல் மற்றும் நிபுணர்களின் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
RS தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஒரு அங்கத்துவராக 1995 இல் இருந்து 2009 வரை இருந்து உள்ளார். அத்துடன் நிதிப்பிரிவின் ஏற்பாட்டியல் பணியில் வேலை செய்து உள்ளார். அவர் இலங்கை இராணுவத்தால் பிடிபட்டு தடுத்து வைக்கப்பட்டு 2009 ஆம் ஆண்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளார். RS தன்னை ஒரு கழிவுக் குழியில் (cesspit) ஒளித்து இருந்து டிசம்பர் மாதம் 2010 இல் தடுப்புக் காவலில் இருந்து தப்பி உள்ளார்.
GJ and others (post-civil war returnees) Sri Lanka [2013] UKUT 319 (IAC) என்ற வழக்கில் உயர் தீர்ப்பாயம் ஆனது பின்வரும் ஆட்களுக்கு இலங்கையில் துன்புறுத்தப்படும் அபாயம் உள்ளது எனக் குறிப்பிட்டு உள்ளது:
ஒருவருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு அல்லது பிடியாணை இருந்தால் வpமான நிலையத்தில் கணினி மயமாக்கப்பட்ட “நிறுத்து” பட்டியலில் (Stop list) அவர் உடைய பெயரை பார்வை இடக் கூடிய வசதி உண்டு. “நிறுத்து“ பட்டியலில் பெயர் உள்ள தனிப்பட்டவர்கள் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டு அது தொடர்பாக பொருத்தமான இலங்கை அதிகாரிகள் இடம் கையளிக்கப்படுவார்கள்.
சான்றுகளை மறு ஆய்வு செய்வதற்கு முன்னாகவே தடுப்புக் காவலில் இருந்து தப்பிய ஒருவர் “நிறுத்து” பட்டியலில் இருப்பார் என எதிர்பார்க்கலாம். இது உள்துறை அமைச்சினால் சிறீலங்கா பற்றித் தயாரிக்கப்பட்ட சொந்த அறிக்கையில் மார்ச் 2012 இல் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அதில் குறிப்பிடப் பட்டுள்ளதாவது:
ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தால் அல்லது தடுப்புக்காவலில் இருந்து தப்பி இருந்தால் அந்த நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று மூத்த புலனாய்வு அதிகாரி தெரிவித்தார். பொலிஸ் மேலதிகாரி மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) இதனை ஒப்புக் கொண்டு உள்ளது. கொள்கை மாற்றுகளுக்கான நிலையத்தின் பிரதிநிதி குறித்த தனி நபர் நிச்சயமாக நிறுத்தப்படுவார் என கூறினார்.
எவ்வாறோ முதல் அடுக்கு தீர்ப்பாயம் மற்றும் உயர் தீhப்பாயம் இரண்டுமே இலங்கைக்கு RS திருப்பி அனுப்பப் படும் பொழுது நிறுத்தப் பட்டு தடுத்து வைக்கப்படுவதற்கான நியாயமான சாத்தியக்கூறுகள் இல்லை என்ற முடிவுக்கு வந்தன. லோர்ட் ஜஸ்ரிஸ் புளொயிட் (Lord Justice Floyd) அவர்கள் உடைய அணுகுமுறையில் நேரடியான சட்டப்பிழை இருப்பதாக அடையாளம் கண்டு கொண்டார்:
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிய சாதகமான காரணங்களை தேடுவதில் ஈடுபட்டிருந்த நீதிபதி இந்த வழக்கின் உள்ளாந்த நிகழ்வுகளை முற்றிலும் கவனிக்கவில்லை. யுத்தம் முடிவடைந்த பின்னர் RS கைது செய்யப் பட்டார். (நான் விரைவில் ஏற்றுக்கொள்வேன் என்றாலும்) பின்னர் 18 மாதங்கள் அவரைத் தடுத்து வைப்பதற்கு அதிகாரிகளுக்கு போதுமான அக்கறை இருந்து உள்ளது. அத்துடன் அந்த தடுப்புக் காவல் நேரத்தில் அவர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். இந்த தடுப்புக் காலம் ஆனது எல்.ரீ.ரீ.ஈ கைதிகளினை விடுதலை செய்யத் தொடங்கிய காலத்திற்கு அப்பாலும் நீடித்து உள்ளது. அவர் விடுதலை செய்யப்படவில்லை. ஆனால் தடுப்பு முகாமிற்கு வருகை தரும் ஒப்பந்தக்காரரின் உதவி உடன் தடுப்புக் காவலில் இருந்து தப்பினார். அந்த நிகழ்வுகளின் அடிப்படையில் அதிகாரிகள் பிடியாணை ஒன்றை பிறப்பிப்பதன் மூலம் அவரை மீண்டும் கைது செய்ய முற்படுவார்கள் எனத் தோன்றுகின்றது.
வழக்கத்திற்கு மாறாக நீதிமன்றம் இந்த வழக்கை மேல் தீர்ப்பாயத்திற்கு அனுப்புவதற்குப் பதிலாக தானே முடிவு செய்தது. மேலும் RS இற்கு துன்புறுத்தல் குறித்து நன்கு அறியப்பட்ட பயம் இருப்பதாகத் தீர்மானித்தது.
இந்த தீர்ப்பு ஆனது RS இற்கு ஒரு சிறந்த தீர்ப்பு ஆகும். மேலும் எந்தவொரு உறுதிப்படுத்தும் சான்றும் இல்லாமல் கூட அதிக வாய்ப்புள்ளதாக கருதப்பட வேண்டிய ஒன்றை நிரூபிக்க அதிக அளவில் நாட்டு சான்றை எடுக்க அவர் உடைய சட்டக்குழு மேற் கொண்ட முயற்சிகளை நிரூபிக்கின்றது.
மிகவும் பொதுவாக கூறும் பொழுது இந்த தீர்ப்பானது தீர்ப்பாயங்கள் உண்மை நிகழ்வுகள் தொடர்பாக பிழையான தீர்ப்பு வழங்கும் பொழுது அதனை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒதுக்கித் தள்ளுவதற்கு மிகச் சிறந்த ஒரு உதாரணம் ஆகும். இது சட்டப் பிழையை போன்று மிகப் பாரதூரமாக கருதப்படும். இந்த தீர்ப்பானது நேரடியாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பாயங்கள் தொடர்பாக அதிக அளவில் மேற்பார்வை செய்ய வேண்டும் என்பதை விட மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆனது மிகப் பாரதூரமான நிகழ்வுகள் தொடர்பான பிழைகளை மிக வினைத்திறன் உடன் கையாள முடியும் என்பதினை எடுத்துக் காட்டுகின்றது.
இலங்கையில் தடுப்புக் காவலில் இருந்து தப்பித்து மேற்படி குறித்த வழக்கின் நிகழ்வுகளின் அடிப்படையில் தஞ்சம் கோரிய ஆட்களுக்கு இந்த வழக்குத் தீர்ப்பு உதவியாக இருக்கும்.
Mrs L Balarajan
Solicitor
Jay Visva Solicitors
T.P: 020 8573 6673
Credits to: Freemovement