Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

நேர்மை அற்ற குடிவரவு வழக்கறிஞர்களின் விபரங்களை திரட்டுமாறு உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறுத்தல்!

குடிவரவு வழக்கறிஞர் ஒருவர் ஐந்து மடங்கு மேலாக Barrister ஒருவரின் கட்டணம் என்று கூறி ஒரு பகுதி பணத்தை மட்டும் Barristerக்கு செலுத்திவிட்டு மீதிப்பணத்தை தானே வைத்துக்கொண்டது பெரும் கவலைக்கிடமான சூழல் சில குடிவரவு சட்ட ஆலோசனை செய்பவர்கல் ஏட்படுத்தப் பட்டுள்ளது என்று முன்னால் உயர் நீதிமன்ற நீதிபதியும் குடிவரவு செயல்குழுவின் தலைவருமாகிய சர் ரோஸ் கிரான்ஸ்டன் (Sir Ross Cranston) தெரிவித்தார்.

இந்த நிலையானது பரவலாக காணப்படுகிறது என்றும் அவர் குறிப்பிடடார். மேலும், இப்படிப்பட்ட வழக்கறிஞர்கள் பற்றி விபரங்களை சேகரித்து வழக்கறிஞர் ஒழுகாற்று ஆணைக்குழுவுக்கு (Solicitors Regulations Authority தெரிவிக்கும் படி குடிவரவு தீர்ப்பாயதை (Immigration Tribunal) அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீதிபதி மேலும் கூறுகையில் குடிவரவு தீர்பாயமானது ஒருவருடைய அகதி அந்தஸ்து போன்றவை அடைப்படை அற்றது என்று உள்துறை அமைச்சால் உறுதிப்படுத்தப்படும் பட்சத்தில் மற்றும் தரம் குறைந்த சட்ட ஆலோசனை கொடுக்கப்பட்ட்தாக தெரியவந்தால் அந்த சட்ட தரணியை பற்றிய விபரங்களை ஆய்வு செய்ய வேண்டும். இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க கீழே உள்ள இணைப்பை அழுத்தவும் : https://www.lawgazette.co.uk/law/tribunals-urged-to-collect-data-on-dishonest-immigration-practitioners/5066734.article?utm_source=dispatch&utm_medium=email&utm_campaign=%20GAZ141016

குறிப்பு: பிரித்தானியாவில் குடிவரவு ஆலோசனை வழங்குபவர்கள் OISC (https://www.gov.uk/government/organisations/office-of-the-immigration-services-commissioner) அல்லது Law Society of England and Wales (https://www.sra.org.uk/home/home.page) இல் அனுமதி பெற்றவர்களாக இருக்கவேண்டும். மேலும் ஒருவர் இந்த அனுமதியை நேரடியா பெறாவிடின் ஒரு பதிவுசெய்த வழக்கறிஞர் அலுவலகத்தில் வேலை செய்பவராக இருந்தால் அப்படி வேலை செய்பவர் சட்டவாளர் அலுவகத்தில் மூன்று வருடத்துக்கு மேலாக வழக்கறிஞராக பணிபுரிந்த ஒருவரின் மேற்பார்வையில் பார்வையில் தான் வேலை செய்ய வேண்டும். அப்படி மேற்பார்வை இல்லாத சூழலில் ஒருவர் வேலை செய்வாராயின் Law Societyஆல் அந்த நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்

மேலே உள்ள செய்தியின் சாராம்சத்தை பார்க்கும் பொழுது நமது சமுதாயத்திலும் சிலர் வழக்கறிஞர் தகமையில்லாமல் அல்லது உண்மையில் சட்ட தாரணிகுரிய கல்வித் தகுதி இல்லாத பட்சத்திலும் தங்களை சட்டத்தரணி என்று கூறிக்கொண்டு பலர் மக்களின் அறியாமையை தவறாக பயன்படுத்துகின்றார்கள். அப்படி நடக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படலாம். ஆகையால் குடிவரவு சட்ட ஆலோசனை வழங்குபவர்கள் OISC போன்ற ஆணைக்குழுவில் பதிவு செய்து ஒழுங்கான பயிட்சியை பெற்று ஒரு பதிவு செய்த தொழில் நிறுவனமாக நடத்துதல் தமிழ் மக்களுக்கும் நெறி முறையோடு தொழில் செயும் சட்ட நிறுவனங்களுக்கும் சாலச்சிறந்தது.

Post a Comment