Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

பிரித்தானியாவில் அகதி தகுதியை பெற்றோருக்கு ஒரு நற்செய்தி!

நேற்று அறிவிக்கப் பட்ட தகவலின் படி பிரித்தானியாவில் அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு தொழில் தொடங்குவர்க்கு பல உதவிகளை வழங்க உள்ளதாக தெரியவருகிறது. இவற்றில் முக்கியமானது, அகதியாக வந்தவர்கள் தொழில் தொடங்குவதற்கு புதிய திட்டம் மற்றும் எண்ணங்களை பெற்று இருந்தால் அவர்களுக்கு தொழில் தொடங்க அடிப்படையாக எப்படி தயார்செய்வது என்பதில் இருந்து தொழிலை ஆரம்பிப்பது வரை உதவிகள் வழங்கப்படும் என்று கூறப்படட்டுள்ளது. இதில் பணம் சார்ந்த உதவிகள் எப்படி இருக்கும் என்று தெளிவாக விபரிக்கப்படவில்லை. இருப்பினும் பிரித்தானிய அரசாங்கம் உதவியுடன் தொழில் தொடங்குவதற்கு தனிப்பட்ட கடனாக (பிரித்தானினிய பவுண்டுகள்) £500 இருந்து £25,000 வரை கடனாக பெறமுடியும். இதை பற்றி மேலும் அறிந்து கொள்ள இங்கே அழுத்தவும்.

இதற்கான செலவை உள்துறை அமைச்சும் national lotteryம் ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சு மேலும் தெரிவிக்கையில் இந்த பணிக்காக மிகவும் திறமை வாய்ந்த ஆலோசகர்கள் கடமை ஆற்றுவார்கள் என தெரிவித்தது. இந்த திட்டத்தை பற்றி வாசிப்பதற்கு இங்கே அழுத்தவும்.

Post a Comment