Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

பிரித்தானியாவில் இருக்கவிரும்பும் ஐரோப்பிய நாட்டவர்களுக்கு 4 மாதம் மட்டுமே உள்ளது

ஜூன் 30, 2021க்கு பின்னர் பிரித்தானியாவில் தொடர்ந்து வாழவிரும்புவோர் ஜூன் 30 க்கு முன்னர் உள்துரை அமைச்சின் இணைய தளத்தில் நிரந்திர பதிவுரிமை திட்டத்தின் (Settlement Scheme) கீழ் பதிவு செய்வது அவசியம்.

இவ்வாறு பதிவு செய்யவிரும்பும் ஐரோப்பிய நாட்டவரும் அவர்களை தங்கி உள்ளவர்களும் டிசம்பர் 31, 2020 க்கு முன்னர் பிரித்தானியாவில் வாழ ஆரம்பித்து இருக்க வேண்டும். அதற்குரிய ஆவணங்களை கொடுப்பதும் அவசியமாகிறது

விண்ணப்பம் மேற்கொள்வதற்கு 4 மாதம் மட்டுமே இருக்கும் வேளையில் இதுவரை ஐக்கிய இராச்சிய உள்துறை அமைச்சு 5.06 மில்லியன் விண்ணப்பங்களை விண்ணப்பதாரர்களிடம் இருந்து பெற்றுள்ளது. இவ்வாறு விண்ணம் மேற்கொண்டவர்களில் 4,571500 பேர் இங்கிலாந்திலும், 252400 பேர் ஸ்காட்லாந்திலும் 83800 விண்ணப்பங்கள் வேல்ஸிலிருந்தும் மெற்கொள்ளப்பட்டுள்ளது.

வயது வேறுபாடில்லாம குழந்தைகளிலுருந்து முதியவர்வரை விண்ணப்பம் மேற்கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது, மேலும் உதவி தேவைப்படுவோருக்கு உதவிசெய்யும் வகையில் பல தன்னார்வல நிறுவனங்களுக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கி வருகிறது. உங்களுக்கு அருகில் உள்ள நிறுவங்கள் தொடர்பாக அறிந்து கொள்ள இந்த இணைப்பை அழுத்தவும்.

Post a Comment