Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

பிரித்தானியாவில் உள்ள சொத்து உரிமையாளர்களின் அவசர கவனத்திற்கு!!

நீங்கள் பிரித்தானியாவில் வீடுகள், சொத்துக்கள் வைத்திருக்கும் உரிமையாளர் ஆயின் உங்கள் சொத்துக்களை மோசடிகளிலிருந்து பாதுகாக்கவேண்டியது அவசியம். தற்பொழுது பிரித்தானியாவில் தங்களை உரிமையாளர்களாக காண்பித்து தங்களுக்குச் சொந்தமில்லாத சொத்துக்களை விற்று பணம் கொள்ளையடிக்கும் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளன. இது தொடர்பான சில வழக்குகள் அண்மைக் காலங்களில் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, அண்மையில் இடம்பெற்ற Dreamvar v Mishcon de Reya  எனும் வழக்கில் ஏமாற்றப்பட்ட ஒரு வாடிக்கையாளரின் சட்டவாளர் அலுவலகம் Breach of Trust  (நம்பிக்கை முறிவு) எனும் அடிப்படையில் 1 மில்லியன் நஸ்ட ஈட்டுக்கு பொறுப்பேற்கவேண்டியிருந்தது.

அத்துடன் இன்னொரு வழக்கில் (Purrunsing v A’Court & Co)  நீதிபதி இரண்டு தரப்பு சட்டவாளர்களுடைய அலுவலகங்களும் (அதாவது வீடு வாங்கியவர்கள் மற்றும் விற்றவர்களை பிரதிநதித்துவம் செய்த சட்டவார்கள்) ஏற்பட்ட நஸ்டங்களை பொறுப்பேற்கவேண்டும் என தீர்பளித்திருந்தார். இதில் விம்பில்டனில் உள்ள சொத்து ஒன்றை மோசடிசெய்த மோசடிக்காரர் தன்னுடைய சொத்து என்று ஏமாற்றி விற்று அந்தப் பணத்தை டுபாயில் உள்ள வங்கி ஒன்றுக்கு மாற்றியிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

இவற்றை தடுக்கும் நோக்கில், லான்ட் ரெஜிற்றி (Land Registry) சொத்து உரிமையாளர்களை Property Alert Services  ல் பதிவு செய்யும்படி அறிவுறுத்துகின்றது. இவ்வாறு செய்வதன் மூலம், அந்த பதிவுசெய்யப்பட்ட வீடு அல்லது சொத்து தொடர்பாக ஏதாவது செயற்பாடுகள் இடம்பெறுமாயின் அந்தச் சேவை உடனடியாகவே இலவசமாக சொத்து உரிமையாளருக்கு தெரியப்படும்த்தும் படி அமைகின்றது. குறிப்பாக Mortgage இல்லாத சொத்துக்கள், வாடகைக்கு விடப்பட்டிருக்கும் சொத்துக்கள் இலகுவாக இவ்வாறான மோசடிக்குள் அகப்படலாம்.

ஆகவே பிரித்தானியாவில் உரிமையாளர்கள் இவ்வாறான மோசடிகள் இடம்பெறாமல் தவிர்க்கும் நோக்கில் உங்கள் சொத்துக்களை இந்த சேவையின் கீழ் பதிவுசெய்யலாம். நீங்கள் 10 வரையான சொத்துக்களை இதில் பதிவு செய்யலாம். எந்நேரத்திலும், சொத்து விபரங்களை அகற்றிவிட்டு வேறு சொத்துவிபரங்களை சேர்த்துக் கொள்ளலாம். அதற்கான இணயத்தள முகவரி இதோ https://propertyalert.landregistry.gov.uk/

அத்துடன், Land Registry  இல் உங்களுடை தொடர்பு விபரங்களை சரியான முறையில் இருக்கின்றதா என்று பரிசீலித்து வைத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக உங்களுடைய தொடர்பு விலாசம், தொலைபேசி எண்கள் மற்றும் ஈமெயில் விபரங்கள் மூலம் உங்களை தொடர்புகொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும். இவைகள் அனைத்தும் நீங்கள் வசித்துக்கொண்டிருக்கும் வீட்டுடன் தொடர்புபட்டிருக்கவேண்டும்.

இறுதியில், நீங்கள் டுயனெ சுநபளைவசல யில் உங்கள் சொத்துப் பத்திரத்தின் (Title) மீது கட்டுப்பாட்டுகளை (Restriction) பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம். உதாரணமாக, சொத்து உரிமையாளருடன் சேந்து வேறு நபர்களுடைய அனுமதி இல்லாமல் குறிப்பிட்ட சொத்தின் உரிமையை மாற்றமுடியாது. குறிப்பாக வாடகைக்கு விடும் சொத்துக்கள் மீதும், வெறுமனையாக உள்ள வீடுகள் மற்றும் Mortgage இல்லாத சொத்துக்களுக்கு இவ்வாறான விடயங்களைச் செய்து வைக்கலாம்.

அத்துடன், சில காப்புறுதிக் (Insurance) கம்பனிகள் காப்புறுதிகளையும் வழங்குகின்றன. சொத்து உரிமையாளர்கள் காப்புறுதிகளையும் பெற்று வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறான மோசடிகள் இடம்பெறாமல் தடுக்கும் நோக்கிலேயே நீங்கள் சட்ட அலுவலகங்களை நாடும் பொழுது Identity and Anti-Money laundering சோதனைகள் மேற்கொளப்படுகின்றன. இனிவரும் காலங்களில் சட்டவாளர்கள் இவ்வாறான சோதனைகளில் கடுமையாக இருப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. சட்டவாளர்கள் உங்களிடம் மேலதிக ஆவணங்கள் மற்றும் ஆதரங்களை எதிர்பார்ப்பார்கள். அத்துடன், அவர்கள் அவ்வாறு இருப்பதன் மூலமே நீங்கள் மோசடிக்குள் அகப்படாமல் தடுக்கமுடியும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.

 

தகவல் Jay Visva Solicitors. மேலதிக தெடர்பு எண் (+44) 020 8573 6673

Post a Comment