Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

பிரித்தானியாவில் குடிவரவு தொடர்பான முக்கிய நீதிமன்ற தீர்ப்பு

அண்மையில் மேன் முறையீட்டு நீதி மன்றம் ஆனது GM (Sri Lanka) vs Secretary of State for the Home Department [2019]  EWCA Civ 1630

என்ற வழக்கில் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய உடன்படிக்கை சட்டப்பிரிவுக் கூறு 8 இன் கீழ் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையை மையமாக வைத்து தாக்கல் செய்யப்படும் வழக்குகளில் நீதிமன்றம் எவற்றை முக்கியமாக கருத்தில் கொள்கின்றது எனக் குறிப்பிட்டு உள்ளது.


சட்டப் பிரிவுக் கூறு 8 (Article 8) தொடர்பான பொதுவான அவதானிப்புகள் அநேகமான தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பான வழக்குகள் விகிதா சார மதிப்பீட்டில் தங்கி உள்ளன என்பது பல வாசகர்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கலாம். இது ஒரு சமநிலைப் படுத்தும் செயல்முறை ஆகும். அதாவது ஒரு ஆள் உடைய தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கை ஆனது வினைத்திறன் மிக்க குடிவரவு கட்டுப்பாட்டினை மற்றும் பொது அக்கறையை நிலை நாட்டுவதை விட முக்கியத்துவம் வாய்ந்ததா? என்பதை தீர்மானிப்பதே இதன் நோக்கம் ஆகும்.


மேன் முறையீட்டு நீதிமன்றம் ஆனது விகிதாசாரம் பற்றி ஆறு “பொதுவான அவதானிப்புகளை” குறிப்பிட்டு உள்ளது. அதாவது மேன் முறையீட்டு நீதிமன்றம் ஆனது உள் துறை அமைச்சிற்கும் மற்றும் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கை அடிப்படையில் தங்கி இருக்க முயற்சிப்பவர்களுக்கும் சில முன் எச்சரிக்கைகளை விடுத்து உள்ளது.

  1. குடிவரவு ஒழுங்கு விதிகள் மற்றும் பிரிவு 117பி (117B) இன் கீழ் கூறப் பட்டு உள்ள பொது அக்கறை மற்றும் வினைத்திறன் மிக்க குடியேற்ற கட்டுப் பாட்டு கொள்கை ஆனவை சட்டப் பிரிவுக் கூறு 8 (Article 8) இன் கீழ் கூறப் பட்டு உள்ள தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கை உரிமைகளை நிலை நாட்டும் நோக்கத்துடன் பொருள் கொள்ளப் பட வேண்டும்.
  2. விகிதாசார மதிப்பீட்டில் பல்வேறு காரணிகளுக்குப் பயன்படுத்தப்பட வேண்டிய எடையை கோடிட்டுக் காட்டுவதற்கு உள்துறை அலுவலகத்திற்கு உரிமை உண்டு. நீதிமன்றங்கள் மற்றும் தீர்ப்பாயங்கள் உள்துறை அலுவலகத்தின் கொள்கைக்கு கணிசமான எடையை வழங்க வேண்டும். இதில் 117B பிரிவில் குறிப்பிடப் பட்டு உள்ள கொள்கை எடைகள் அடங்கும். எவ்வாறாயினும் மனித உரிமைகள் சட்டம் 1998 உடன் ஒத்துப்போவதை உறுதி செய்ய இந்தப் பிரிவு ஒரு குறிப்பிட்ட அளவிலான நெகிழ்வுத்தன்மையை அதில் செலுத்தி இருக்க வேண்டும். இதனால் அதன் பயன்பாடு எப்போதுமே சட்டப் பிரிவுக் கூறு 8 உடன் இணக்கமான இறுதி முடிவுக்கு வழிவகுக்கும்.
  3. குடிவரவு விதிகளுக்கு வெளியே ஒரு மதிப்பீட்டிற்கான சோதனை என்பது பொது மற்றும் தனியார் நலன்களை சீர் தூக்கி பார்க்கும் பொழுது ஒரு நியாயமான சமநிலை நிலை நாட்டப் படக் கூடியதாக உள்ளதா என மதிப்பிடுவது ஆகும். தங்குவதற்கு அனுமதி வழங்கப்படுவதற்கு முன்பாக ஒரு வழக்கு ஆனது “தளிச் சிறப்பு வாய்ந்ததாக” இருக்க வேண்டும் என்ற உள் துறை அமைச்சின் ஒழுங்கு விதிகள் மற்றும் உள்துறை அமைச்சு கொள்கை ஆனவை சட்டப் பிரிவு 8 இன் கீழான விகிதாசார சோதனைக்கு மேலாக அதிகமான அளவில் எந்த ஒரு அசாதாரண தேவைப் பாட்டையும் விதிக்கவில்லை எனக் கருத்தில் கொள்ள வேண்டும்.
  4. விகிதாசார சோதனை ஆனது ஒவ்வொரு தனிப் பட்ட வழக்கின் சூழ் நிலைகளைப் பொறுத்தது ஆகும். வழக்கின் சூழ் நிலைகள் உலகத்தின் யதார்த்தமான நடை முறை அர்த்தத்தில் மதிப்பீடு செய்யப் பட வேண்டும்.
  5. சரியான ஆதாரங்களை சமர்ப்பிக்கும் தேவைப்பாடு ஒன்று உள்ளது. ஒரு விண்ணப்பதாரர் தனது தனிப்பட்ட சூழ் நிலைகள் குறித்து வலியுறுத்துவது ஆவண சான்றுகளால் ஆதரிக்கப்படாவிட்டால் அது போதுமானது என அவசியம்; ஏற்றுக் கொள்ளப் பட மாட்டாது.
  6. விகிதாசார மதிப்பீட்டில் பரிசீலிக்கப் பட வேண்டிய தொடர்புடைய காரணிகளின் பட்டியல் மட்டுப் படுத்தப்படவில்லை. சட்டப் பிரிவுக் கூறு 8 இன் கீழ் கொள்கை ரீதியில் ஒரு குறிப்பிட்ட வழக்கில் கொடுக்கப் படும் காரணிகளுக்கு ஒரு வரம்பு இல்லை. அத்துடன் இது ஒரு உணர் திறன் மிக்க நடை முறை ஆகும்.

உள் துறை அமைச்சிற்கு சரியான சோதனை ஆனது விகிதாசார அடிப்படையே தவிர தனிச் சிறப்புத் தன்மை அல்ல என இந்த வழக்கில் ஞாபகம் ஊட்டப் பட்டு உள்ளது. இங்கு சரியான கேள்வி என்னவெனில் போட்டியிடும் நலன்களுக்கு இடையே ஒரு நியாயமான சமநிலை ஏற்பட்டு உள்ளதா என்பது தான். அத்துடன் உள் துறை அமைச்சு அதிகாரிகளுக்கு பிரிவு 117பி இல் கோடிட்டு காட்டப்பட்டு உள்ள கொள்கை ஆனது அவசியமாக ஒரு தெய்வீக ஆணையாக கருதப்பட வேண்டியது இல்லை எனக் கூறப் பட்டு உள்ளது.
குழந்தைகளின் சிறந்த நலன்களுக்கான சரியான அணுகுமுறை என்ன?
எந்த ஒரு குழந்தையின் சிறந்த நலன்களும் மிக முக்கியமாக கருத்தில் கொள்ளப் பட வேண்டியவை ஆகும். தனியே குழந்தைகளின் நலன்கள் மாத்திரம் தீர்ப்பு எடுக்க காரணிகளாக இருக்க முடியாது. அத்துடன் அவை குறிப்பிடத்தக்க அளவு எடையைக் கொண்டு இருக்க வேண்டும். பெற்றோர்கள் குற்றவியல் அல்லது தவறான நடத்தை ஆகியவற்றால் வகைப் படுத்தப் பட்ட சந்தர்ப்பங்களில் கூட பெற்றோhரின் நடத்தைக்கு குழந்தைகளைக் குறை கூற முடியாது. பெற்றோர்கள் எங்கு இருக்க வேண்டும் என எதிர் பார்க்கப் படுகின்றார்கள் என்பதை தீர்மானிப்பதில் இது தவிர்க்க முடியாத அளவில் பொருத்தமானதாக அமைந்து விடுகின்றது. மற்றும் ஐக்கிய இராச்சியத்தில் தங்குவதற்கான உரிமையை நிறுத்தி விட்டு அவர்களை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டால் பெற்றோர்கள் தொடர்பான பதிவுகள் அங்கு பொருத்தமான விடயமாக அமைந்து விடும்.
வழக்கின் உண்மைத் தன்மையை பொறுத்தே தீர்மானிக்கப்படும் என குடிபெயர்ந்தவர்கள் மற்றும் அவர்கள் உடைய பிரதிநிதிகள் நினைவு ஊட்டப் படுகின்றார்கள். ஒரு நபரின் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கையில்; உள் துறை அமைச்சு முடிவு ஆனது சரியற்ற விதத்தில் தலையிடுகின்றது என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் தேவை. வெறுமனே வலியுறுத்துவது உங்களை வெகு தூரம் கொண்டு செல்லாது. நிபுணர் உடைய அறிக்கைகள் – நாட்டிற்கு திரும்பிச் செல்லும் பொழுது எதிர் கொள்ளக் கூடிய நிலைமைகள் பற்றி அந்த நாட்டு நிபுணர்கள் இடம் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டும் அல்லது ஒரு உளவியலாளர் அல்லது மனநல மருத்துவர் இடம் இருந்து குழந்தைகளை அல்லது பாதிக்கப் படக் கூடிய நிலையில் உள்ள பெரியவர்களை அவர்கள் உடைய நாட்டிற்கு திருப்பி அனுப்புவதால் ஏற்படக் கூடிய தாக்கம் தொடர்பாக அறிக்கை பெற்றுக் கொள்ள வேண்டும். இவை மிகவும் விலை மதிக்க முடியாத அளவு முக்கியமான சான்றுகள் ஆகும். இவை சரியான சான்றுகளை வழங்கும் கடப்பாட்டை பூர்த்தி செய்ய உதவி செய்கின்றன. எவ்வாறு இருப்பினும் இவ்வாறு அறிக்கைகளை பெற்றுக் கொள்வது மிகச் செலவான விடயம் ஆகும். ஆகவே எல்லோராலும் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியாது என மேற் படி வழக்கில் மேன் முறையீட்டு நீதி மன்றம் குறிப்பிட்டு உள்ளது.
வெளிநாட்டில் குடும்ப வாழ்க்கையைத் தொடர ஒரு குடும்ப உறுப்பினர் இங்கிலாந்தை விட்டு வெளியேற நேரிட்டால் கைவிட வேண்டிய உரிமைகளின் தன்மை எந்த அளவில் பொருத்தமானதாக இருக்கும்?
இது மிகப் பொருத்தமான ஒரு விடயம் ஆகும். இது ஒரு குடும்ப உறுப்பினரின் தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு வழங்கப்பட வேண்டிய எடையை பெரிதும் பாதிக்கும்.
சட்டம் ஆனது அந்த வழக்கில் உள்ள குடும்ப உறுப்பினரின் உண்மையான குடியேற்ற நிலை அந்தஸ்தை கருத்தில் கொள்ளும். ஒரு தீர்க்கமான குடிவரவு அந்தஸ்தை (settled status) நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் ஒரு குடும்ப உறுப்பினர் ஒப்பீட்டளவில் அத்தகைய பாதையில் இல்லாத அதாவது தற்றுணிபு அடிப்படையில் வழங்கப் பட்ட அனுமதி (Discretionary Leave-DLR) உடைய குடும்ப உறுப்பினரினரை விட மிகப் பலமான நிலையில் உள்ளார். இந்த ஒப்பீட்டு நிலைமை ஆனது விகிதாசாரம், நியாயமான சமநிலை ஆகிய மதிப்பீட்டில் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட வேண்டிய விடயம் ஆகும். மேற்படி இரண்டு சந்தர்ப்பங்களிலும் உரிமைகள் இன்னமும் நிச்சயமற்ற நிலைமையில் தான் உள்ளன என்பது சரியாக இருக்கும். ஆனாலும் உண்மையில் இத்தகைய வழக்குகளில் ஒரு நபருக்கு இருக்க கூடிய குடிவரவு அந்தஸ்து தொடர்பாக வைத்து இருக்கும் உரிமைகளை கருத்தில் கொள்ள வேண்டியது பொருத்தமானவை ஆக இருக்கும்.
மேற்படி வழக்கில் உள் துறை அமைச்சு ஏற்கனவே கணவன் மற்றும் குழந்தைகளுக்கு விசா வழங்கி இருந்தது. அவர்கள் ஒரு தீர்க்கமான குடிவரவு அந்தஸ்திற்கான பாதையில் இருந்தனர். “கணவன் மற்றும் குழந்தைகள் ஐக்கிய இரரச்சியத்தில் இருப்பதற்கு தெளிவான, குறிப்பிடத்தக்க ஆட்சேபனை இல்லை” ஆனால் மனைவி மற்றும் தாய் உடன் தங்கள் குடும்ப வாழ்க்கையை தொடர இலங்கைக்கு செல்ல அவர்களைக் கட்டாயப் படுத்தவது விகிதாசாரமானதா என்ற மதிப்பீட்டிற்கு அவர்கள் உடைய குடி வரவு அந்தஸ்து நிலை பொருத்தமானது ஆகும்.
மேற்படி மேன் முறையீட்டு நீதிமன்ற வழக்கு தீர்ப்பு ஆனது குடிவரவு வழக்குகளில் குழந்தைகள் உள்ள குடும்பங்கள் உடைய தனிப்பட்ட மற்றும் குடும்ப வாழ்க்கை தொடர்பாக நீதிமன்றம் உடைய நிலைப்பாடு பற்றி மேலும் அறிவதற்கு உதவியாக உள்ளது.

Mrs L Balarajan

Solicitor

Jay Visva Solicitors

Telephone No: 020 8573 6673

Post a Comment