Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதை நிறுத்துமாறு கோரிக்கை!

ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்தின் மனித உரிமை கமிட்டி அரசாங்கத்தின் சச்சைக்குரிய நல் ஒழுக்க (good character requirement) தேவையானது கடுமையாக கையாளப்படுவதாக தெரிவித்துள்ளது.

பின்னணி

ஒருவர் பிரித்தானிய குடியிருமை பெறுவதற்கு நல்ல குணம் படைத்தவராக இருக்க வேண்டும். இந்த சட்ட தகமையானது குழந்தைகளாக இருந்தாலும் பெரியவராக இருந்தாலும் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த சட்ட தேவையானது பிரித்தானியாவில் பிறந்த குழந்தைகளுக்கு ஒரு சவாலாக இருப்பதாக இது தெரிவித்துள்ளது. ஏனெனில் ஒரு சிறு தவறை செய்திருந்தாலும் அவர் பிரித்தானிய குடியிருமையை பெறுவதற்கு பலகாலம் காத்திருக்க வேண்டி உள்ளது. இது மனித உரிமை சட்டத்துக்கு விரோதமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முந்தய அறிக்கைகளில் இந்த கமிட்டி உள்துறை அமைச்சால் அறவிடப்படும் அதிகூடிய கட்டணங்களை விமர்சனம் செய்து இருந்தது.

இந்நிலையில், பிரித்தானிய அரசனானது the British Nationality Act 1981இல் மாற்றத்தை கொண்டு வரும் வகையில் வரைவு சட்டத்தை முன் வைத்துள்ளது. இந்த மாற்றமானது தற்போழுது உள்ள மேலே குறிப்பிடப்பட்ட குடியிருமை சட்டம் மனித உரிமைச் சட்டத்துடன் இணக்கமான தன்மையை பெற்று இருக்கும் என்று நம்பப்படுகிறது.

அதே வேலையில் பிரித்தானிய குடியுரிமை சட்டத்தில் தற்போழுது உள்ள மனித உரிமைக்கு விரோதமான மற்றைய காரணிகளான பெற்றோர் பிரித்தானிய குடியிருமையை பெற்று இருந்தால் ஒருவிதமாகவும், பெற்றோர் பிரித்தானிய குடியிருமையை பெறவில்லை என்றால் வேறு விதமாகவும் குழந்தைகளின் விண்ணப்பங்கள் கையாளப் படுவதையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டி, அப்படிப்பட்ட சட்டங்கள் மனித உரிமைக்கு இணக்கமான முறையில் இருக்க வேண்டும் என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது.

Post a Comment