Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

பிரித்தானியாவில் மனிதாபிமானம் அடிப்படையில் குடிவரவு வதிவுரிமை கொடுக்கப்படுமா?

25 ஜூலை 2019 அன்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் Dr ரூபா ஹக் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன் பதில் கூறுகையில், தான் முன்பு தெரிவித்தது போல் தனது அரசாங்கம் இந்த நாட்டில் எந்த விதிவுரிமையும் இல்லாமல் சட்ட விரோதமாக தங்கி இருப்போருக்கு “குடிவரவு மனிதாவிமானம்” அடிப்படையில் வதிவுரிமை வழங்கப்பட பரிசீலனை செய்யப்படும் என்று தெரிவித்தார். இவர் மேலும் தெரிவிக்கையில், இப்படி வதிவுரிமை வழங்கும் முடிவு எடுக்க முன்னர் சாதகமான மற்றும் பாதகமான பொருளாதார விளைவுகள் ஆராயப்படும் என்றும் அவர் கூறினார். ஐந்து லச்சத்துக்கும் மேற்பட்டவர்கள் சரியான குடிவரவு பத்திரங்கள் இல்லாமல் தங்கி இருக்கலாம் என்று நம்பப் படுகிறது. இவர்கள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் பிரித்தானியாவுக்குள் பல காரனங்களுக்குகாக வந்தவர்கள் ஆகும். இவர்களில் இலங்கை, தமிழ் நாடு போன்ற பகுதிகளை சாந்தவர்களும் உள்ளடங்குவார்கள்.

பிரித்தானிய பிரதமரின் இந்த அறிவித்தலுக்கு பல காரணங்கள் தெரிவிக்கப்பட்டாலும், இப்படி சட்ட விரோதமாக தங்கி இருப்போரை நாட்டை விட்டு வெளியேற்றுதல் மிகவும் கடினமான விடயமாக இருக்கும், மேலும் அவர்களுக்கு வதிவுரிமை கொடுப்பதன் மூலம் அவர்கள் இந்த நாட்டுக்கு சாதகமான பொருளாதார மற்றும் பல வகைகளில் பங்களிப்பை செய்ய முடியும் என்று அவர் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் குறிப்பிட்டது போல் இந்த நாட்டில் ஏற்கனவே இவ்வாறு சட்ட விரோதமாக நீண்ட காலம் தங்கி இருப்போருக்கு தற்காலிக வதிவுரிமை வழங்க சட்டம் இருக்கிறது. இந்த சட்டத்தின் கீழ் ஒருவர் 18-24 வயதுக்கு கீழ்ப்பட்டவராக இருந்து அவருடைய அரை வாசி வாழ்நாளுக்கு மேல் இந்த நாட்டில் வசித்து இருந்தால், 18 வயதுக்கு கீழ்ப்பட்டவராக இருந்து ஏழு வருடங்களுக்கு மேல் இந்த நாட்டில் வசித்திருந்தால் அல்லது ஒருவர் 25 வயதுக்கு மேற்பட்டவராக இருந்து 20 வருடங்கள் பிரித்தானியாவில் வசித்து இருந்தால் வதிவுரிமை வழங்கப்படலாம். ஒருவர் வெற்றிகரமாக விண்ணப்பம் செய்வார் ஆயின் அவருக்கு இரண்டரை வருடங்கள் முதலில் வழங்கப்படும். இந்த நாட்டில் அவர் நிரந்தர வதிவுரிமையை பெற வேண்டுமாயின் அவர் தொடர்ந்து நான்கு தடவைகள் வதிவுரிமையை பெற்று இருக்க வேண்டும், அதாவது பத்து வருடங்கள் பிரித்தானியாவில் வதிவுரிமையுடன் இருக்க வேண்டும்.

6 ஜூலை 2019 பிரித்தானிய பிரதமர் பிரித்தானியாவில் உள்ள the Daily Mail பத்திரிக்கைக்கு கொடுத்த நேர்காணலில் இப்படி வதிவுரிமை பெறுவதற்கு ஒருவர் 15 வருடங்கள் பிரித்தானியாவில் வாழ்ந்திருக்க வேண்டும் மற்றும் குற்றச்செயலில் ஈடுபட்டு இருக்கக் கூடாதென்று கூறினார். 2003இல் இருந்து 2012 வரை ஒருவர் இந்த நாட்டில் 14 வருடங்கள் இருந்திருந்தால் நிரந்திர வதிவுரிமை பெறலாம் என்ற சட்டம் நடைமுறையில் இருந்திருக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

போரிஸ் ஜான்சன் அவர்கள் 22 டிசம்பர் 2008 இல் லண்டன் மேயராக இருக்கும் பொழுது மனிதாவிமான குடிவரவு வதிவுரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறி இருந்தார், ஆனால் அது குறிகிய காலம் இருந்தவர்களுக்கு வழங்குவதற்கு தான் ஆதரவளிக்கவில்லை என்று கூறி இருந்தார். இவர் the Telegraph பத்திரிகைக்கு 2 ஜூலை 2019 தெரிவிக்கையில் ஒருவர் 12 வருடங்கள் வாழ்ந்து இருந்திருந்தால் வதிவுரிமை வழங்கப்படலாம் என்று கூறி இருந்தார். இவர் இதற்காக தொடர்ந்து பேசி வந்துள்ளார். 2016 Brexit தொடர்பாக பிரச்சாரம் செய்த பொழுது இவர் இதை வலியுறுத்தினார்.

தற்பொழுது உள்ள சட்டத்தின் கீழ் பலரின் விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டு மேல்முறையீடு செய்வதற்கு உரிமை கொடுக்கப்படாத சூழலும் இருக்கிறது. அதே வேளை சிறிய குற்றங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளாத முறையும் உள்ளது. ஆனால், தற்பொழுது பிரித்தானிய பிரதமர் கூறும் நிபந்தனைப்படி குற்றச் செயல்கள் ஒன்றும் இருக்கக்கூடாது என்று கூறப்படும் பொழுது 500,000 நபர்களில் எத்தனை பேர் தகுதியுடையவர்களாக இருப்பார்கள் என்பது ஒரு கேள்விக் குறியே, ஏனெனில் சட்டத்துக்கு விரோதமாக வேலை (வேலை செய்வதற்கு அனுமதி இல்லாமல்) செய்தல் போன்ற விடயங்களும் பாரதூரமான விடயமாகவே தற்பொழுது உள்ள குடிவரவு சட்டத்துக்குள் பார்க்கப்படுகிறது. எது எப்படி இருக்குமாயினும், இந்த விடயம் Brexit நடைபெற்ற பிறகே முழுமையாக ஆராயப்படும் என்பதில் ஐயம் இல்லை.

இதற்கு முன்னர் 2006-2011 வரைக்கும் Legacy Programme என்ற பெயரில் பல நூற்றுக்கணக்கான வதிவுரிமை இல்லாதவர்களுக்கு வதிவுரிமை வழங்கப்பட்டு இருந்தது. அதாவது 80% சதவிகிதமானவர்களுக்கு நிரந்திய வதிவுரிமை வழங்கப்பட்டு இருந்தது. இதற்கு முன்னர் குழந்தைகளை மையமாக வைத்து மனிதாபிமானம் அடிப்படியில் நிரந்திர வதிவுரிமை வழங்கப்பட்டமை யாவரும் அறிந்ததே.

 

 

Post a Comment