Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

பிரித்தானிய குடியுரிமை விண்ணப்பதை கடினமாக்கும் நல்நடத்தை கொள்கை!!!

மீண்டும் ஒரு முறை பிரித்தானிய பிரஜா உரிமை விண்ணப்பதிற்கு தேவையான நல்நடத்தை  கொள்கை  சம்பந்தமாக  உள்நாட்டு  திணைக்களத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட  முக்கியமான   வழக்கான  R (Al -Enein) v  Secretary of State for the Home Department [2019]EWCA Civ 2024 தோல்வியை கண்டுள்ளது.   

இதில் முக்கியமான கேள்வி, ஒருவர் பிரஜா  உரிமைக்கு விண்ணப்பிக்கும் போது  நல்நடத்தை கொள்கையை அவர் விண்ணப்பித்த நாளில் இருந்து பத்து வருடங்கள் பின் நோக்கி பார்ப்பது சட்டபூர்வமானதா இல்லையா என்பதேயாகும்.

இந்த வழக்கை சுருக்கமாக கூறுவோமாயின் திரு AL -Enein என்பவர் ஐக்கிய  ராச்சியத்தில் 20 November 2007 கும் 27 January 2010ற்கும் இடைப்பட்ட காலத்தில் சட்ட  பூர்வமான வதிவிட  அனுமதி இல்லாமல்  ஐக்கிய  ராச்சியத்தில் வாழ்ந்து வந்திருக்கிறார். இதனால் இவரை அவரது சொந்த நாடான  Lebanonக்கு  உள்துறை அமைச்சால் திருப்பி அனுப்பப்பட்டார். இவர் மீண்டும்  ஐக்கிய  ராச்சியத்திற்குள் சட்டபூர்வமாக ஒரு பிரித்தானிய பிரஜா உரிமையுள்ள ஒருவரை மணமுடிக்கும் மணாளாக 2012 இல் நுளைந்தார். இதன் பின் படிப்படியாக  நிரந்தர வதிஉரிமையும்  பெற்று 2015 இல் பிரித்தானிய பிரஜா உரிமைக்கு  விண்ணப்பித்தார். ஆனால்  நல்நடத்தை கொள்கையின் கீழ் இவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. கடந்த 10 வருடங்களுக்குள் இவர் இந்த நாட்டில் சட்டப்பூர்வமான வதிவிட உரிமை இல்லாமல்  வாழ்ந்த  காரணத்தினால், அவர்   குடிவரவு சட்டத்தை மீறியுள்ளார். அவருடைய  பிரித்தானிய பிரஜா உரிமை  விண்ணப்பம்   நிராகரிக்கப்பட்டதற்கு  முக்கிய காரணம்  அவருடைய இந்த நடவடிக்கையே. 

இந்த வழக்கு ஒரு  முக்கியமான சவாலாக வாதிடப்படவேண்டிய காரணம் என்னவென்றால் பிரித்தானிய  குடியுரிமை சட்டம் 1981 (British Nationality Act 1981)ல் பிரித்தானிய  பிரஜா உரிமைக்கு  விண்ணப்பிக்கும் போது  குடி வரவு சட்டங்களை மீறாமல் அந்த குறிப்பிட்ட  நபர் இந்த நாட்டில் வாழ்ந்து  இருக்க வேண்டிய கால அளவு என்னவென்று அதில் குறிப்பிட்டு இருக்கிறது.  அந்த  சட்டத்தின் பிரகாரம்  பிரித்தானிய பிரஜையை மணமுடித்தால் 3 வருடங்களின் பின்னரும்   மற்றைய எல்லோருக்கும் 5 வருடங்களுக்கு பின்னரும் ஆகும். இக்கால வரையரைகள்   பிரிட்டிஷ் குடியுரிமை சட்டம் 1981 (British Nationality Act 1981) அமுல் படுத்தும் போது பிரித்தானிய பாராளுமன்றத்தினால்  முடிவெடுக்கப்பட்டவை ஆகும். ஆனாலும்  உள்துறை செயலாளர் தன்னுடைய சட்டரீதியான விருப்பப்படி 7 அல்லது 5  வருட ங்கள் வரை குறிப்பிட்ட சில   வகையான விண்ணப்பங்களுக்குரிய  காலவரையரையைகளை   நீடித்து அந்த விண்ணப்பதாரி நல்நடத்தை கொள்கைபடி நடந்துள்ளாரா  இல்லையா என்பதை தீர்மானிக்க  முடிகின்றது.

மேற்குறிப்பிட்ட  உள்துறை செயலாளரின் சட்டரீதியான விருப்பமானது கொடுக்கப்பட்ட  அதிகாரதிற்கும் மேலானது என்று வாதிக்கப்பட்டள்ளது.   உள்துறை திணைக்களம்  தானே  வரையறைகளை நீடித்து  விசாரணை செய்வதற்கு பாராளுமன்றம் ஒரு சட்டக்கோர்வையை  ஒன்றை நெறிப்படுத்தியிருக்கலாம் என்று எண்ணுவதற்கு வழிகோருகிறது       

இதற்கான விளக்கத்தை  மேல்முறையீட்டு நீதிமன்றம் (Court of Appeal)  கூறுகையில்   பாராளுமன்றம்  உள்துறை  அமைச்சருக்கு  பிரித்தானிய பிரஜா உரிமைக்கு விண்ணப்பிக்கும்  நபர் நல்நடத்தை கொள்கைபடி  செயல்பட்டாரா இல்லையா என்பதை நிர்மாணிக்க வேண்டிய  தேவையை அவரிடம் வேண்டி நிற்பதினாலும்,  அவர் அதை எப்படி செய்ய வேண்டும்  என்பதை குறிப்பிட் டு கூறாதபடியினாலும்   உள்துறை  அமைச்சர்  தான்  விரும்பிய  எந்த கொள்கையும்   உபயோகிக்கலாம் என்று கூறி தெளிவுபடுத்தியிருக்கிறது.

மேலும் இந்த இடத்தில் கூறவேண்டிய முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் அகதி அந்தஸ்துடன்  உள்ளோர்  தாம் எப்போது முதல் தடைவையாக உள்நாட்டு   திணைக்களத்துடன் தொடர்பு கொண்ட  நாளில் இருந்து 6 வருடங்களுக்கு பின்னர் தான் பிரித்தானிய பிரஜா உரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.   இடையில் தொடர்புகள் இல்லாமல் இருந்திருந்தால் மீண்டும் தொடர்பு ஏற்பட்ட  நாளில் இருந்து 6 வருடங்களின் பின்னரே விண்ணப்பிக்க  முடியும்

Post a Comment