Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

குடிவரவு மேல்முறையீடு செய்து காத்திருப்போர்க்கு ஓர் நற்செய்தி !

பிரித்தானிய உள்துறை அமைச்சால் புதிதாக அறிவிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலின் படி (programme) 20 வாரங்களுக்கு மேலாக முடிவெடுக்கப்படாமல் மேல்முறையீட்டில் (pending appeals) நீதி மன்றத்தில் இருக்கின்ற மேல்முறையீட்டு மனுக்களை மறுபரிசீலனை செய்வதற்கு முடிவு செய்துள்ளது. இந்த மறுபரிசீலனையானது பொதுவாக அரச சட்ட திணைக்களத்தில் பதிவு செய்துள்ள சட்டத்தரணிகளால் (Barristers) நடத்தப்படும். இந்த சட்ட தரணிகளுக்கு உள்துறை அமைச்சின் முடிவுகள் தவறு என்று படும் தருணத்தில் அந்த முடிவுகளை மீளப்பெறும் படி உள்துறை அமைச்சு அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். அதைத்தொடர்ந்து மனுதார்களுக்கு பிரித்தானியாவில் இருப்பதற்கு அவரின் விண்ணப்பத்துக்கேற்ப வதிவுருமை உள்துறை அமைச்சால் வழங்கப்படும்.

இந்த மறுசீராய்வால் மேல்முறையீடுத் திகதியில் மாற்றங்கள் வராது. ஆனால், உள்துறை அமைச்சின் முடிவு திரும்பப் பெற்றுக் கொள்ளப்பட்டால் வழக்கு விசாரணை நடக்காது.

உங்கள் வழக்கையும் மீளாய்வு செய்ய விரும்பினால் கீழே உள்ள மின்னச்சல் ஊடக நீங்கள் உள்துறை அமைச்சை தொடர்பு கொள்ளலாம்: appealsreviewteam@homeoffice.gsi.gov.uk

இந்த வேண்டுகோளை உள்துறை அமைச்சிடம் முன் வைப்பதற்கு முன் நல்ல சட்ட ஆலோசனையை பெறுவது உங்களுக்கு உதவியாக இருக்கும்.

நன்றி: 10 கிங்ஸ் பெஞ்ச் வாக் (10 Kings Bench Walk)

Post a Comment