
புதிய சட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் பட்டம் பெறுவோருக்கு 2 வருட வேலை அனுமதி!
உள்துறை அமைச்சு அறிவித்த புதிய திட்டங்களின் கீழ், சர்வதேச மாணவர்கள் பட்டப்படிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த புதிய சட்டம் எப்பொழுது வரும் என்ற தகவல் தெளிவாக தெரிவிக்கப்படவில்லை ஆனால் அடுத்த வருடம் 2020 செப்டம்பர் மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரலாம் என்று நம்பப்படுகிறது.
இந்த சட்டம் 2012க்கு முன்னர் இருந்த நிலைக்கு சட்டத்தை எடுத்து செல்கிறது. அதாவது இந்த சட்ட அமைப்பு post-study visa என்ற பிரிவின் undergraduate அல்லது அதற்கு மேல் படித்த மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்தவுடன் இரண்டு வருடங்களுக்கு பிரித்தானியாவில் தங்கி இருந்து வேலை அல்லது பயிற்சி செய்ய முடியும். இது முதல் முதலில் 2004இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய உள்துறை செயலாளர் தெரேசா மே மாற்றுவதற்கு எடுத்த முடிவை இந்த புதிய சட்டம் மாற்றியமைக்கிறது. தற்பொழுது வெளிநாட்டு மாணவர்கள் பட்டம்படிப்பு முடிந்தவுடன் 4 மாதத்துக்குள் பிரித்தானியாவை விட்டு வெளியேற வேண்டும். அதைத் தொடர்ந்து சமீபத்தில் பட்ட படிப்பு முடிந்தவுடன் 6 மாதத்துக்கு post-study work visa கொடுக்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போதைய பிரித்தானிய பிரதம மந்திரி திரு போரிஸ் ஜான்சன் தெரிவிக்கையில் இந்த அறிமுகத்தால் மாணவர்கள் தங்கள் திறன்களை அறிந்து கொள்ள இந்த புதிய சட்டம் உதவும் என்று குறிப்பிட்டார்.
புதிய திட்டங்களின் கீழ், மாணவர்கள் செய்யும் வேலையில் எந்த தடையும் இல்லை, எண்களில் கட்டுப்பாடுகள் இல்லை.
450,000க்கும் மேற்பட்ட சர்வதேச மாணவர்கள் தற்போது இங்கிலாந்து பல்கலைக்கழகங்களில் படிக்கின்றனர்.
இவர்களில், கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள். இவர்களுக்கே இந்த சட்டம் பொருந்தும்.
இந்த மாணவர்களில் சுமார் 170,000 முதல் 185,000 வரை ஒவ்வொரு ஆண்டும் பட்டம் பெறுகிறார்கள், தற்போதைய விதிகளின் கீழ், அவர்கள் மற்றொரு விசாவிற்கு மாறுவதற்கு நான்கு மாதங்கள் உள்ளன. பலர் தொடர்ந்து படிக்ககவும் முடிவு செய்கிறார்கள்.
2018 ஆம் ஆண்டில், 6,300 நபர்கள் மாணவர் விசாக்களிலிருந்து திறமையான பணி விசாக்களுக்கு (skilled worker ) மாறிஉள்ளார்கள், அதாவது முதல் ஆண்டில் குறைந்தது, 20,800 பவுண்களை ஊதியமாக பெறும் வேலைகளை அவர்களுக்கு அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 450 பேருக்கு “உயர் மதிப்புடைய புலம்பெயர்ந்தோர்” விசாக்கள் வழங்கப்பட்டன (, அவை பொதுவாக ஒரு துறையில் குறிப்பிட்ட நிபுணத்துவம் பெற்றவர்களுக்கு அல்லது நாட்டில் முதலீடு செய்ய ஒரு குறிப்பிட்ட தொகை உள்ளவர்களுக்கு ஒதுக்கப்பட்டவை (e.g Entrepreneur visa (Tier 1)).
ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 40,000 மாணவர்களின் விசாக்கள் நீட்டிக்கப்படுகின்றன என்றும் தெரிவிக்கப்படுகிறது இது இங்கிலாந்தில் ஏராளமான பட்டதாரிகள் தொடர்ந்து படித்து வருவதைக் குறிக்கிறது.
இதில் இன்னும் 100,000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் விசாக்களை முறையாக நீட்டிக்கவில்லை அவர்களில் எத்தனை பேர் இங்கிலாந்தை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதற்கான முழுமையான புள்ளிவிவரங்கள் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.