Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

வாகனத்தில் இருக்கை பட்டை அணியாத ஓட்டுனர்களுக்கு Penalty Points!

 

வாகன இருக்கை (பாதுகாப்பு)  பட்டையை அணியாத வாகன ஓட்டுனர்களுக்கு அவர்கள் ஓட்டுநர் அனுமதி பத்திரத்தில் தண்டனை புள்ளிகள் வழங்க பிரித்தானிய அரசாங்கம் (England, Scotland and Wales மட்டும்) முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தவறு செய்யும் ஓட்டுனர்களுக்கு தண்டனையை அதிகரிக்கும் நடவடிக்கை ஆகும். இது பிரித்தானிய அரசாங்கம் Road Safety Action Plan என்ற திட்டத்தின் கீழ் உயிர் இழப்புகளை தவிர்ப்பதற்காக எடுத்துள்ள 74 விதமான செயல்பாடுகளில் ஒன்றாகும்.

இப்பொழுது உள்ள சட்டத்தின் கீழ் தண்டப்பணமாக £100 மட்டுமே அறவிடப்படுகிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். இவ்வாறு தவறு செய்பவர்களுக்கு எவ்வளவு புள்ளிகள் வழங்கப்படும் என்பதை போக்குவரத்து திணைக்களம் (The Department for Transport) முடிவு செய்யும். மூன்று வருடங்களுக்குள் 12 தண்டனை புள்ளிகளை பெற்றால் ஓட்டுநர் அனுமதியை ஒருவர் இழக்க நேரிடும். இருக்கை பட்டையை அணியாமல் இருப்போருக்கு வட அயர்லாந்தில் £500 பிரித்தானிய பவுண்டுகள் தண்டப்பணமாக தற்போழுது அறவிடப்படுகிறது.

2017 வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களின் படி 787 (நபர்கள்) car இல் பயணம் செய்தவர்களில் 27% நபர்கள் இருக்கை பட்டியை அணியாதவர்கள் என்பது குறிப்பிட கூடியது.

Post a Comment