Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

பிரித்தானியா: மேல்முறையிட்டு நீதிமன்றத்தின் எரி வாயு (Gas) பாதுகாப்பு சான்றிதழ் தொடர்பான முக்கிய தீர்ப்பு

இன்று மேல்முறையிட்டு நீதிமன்றம் பலரால் ஆவலாக எதிர்ப்பது இருந்த Trecarrell House vs Patricia Rouncefield என்ற வழக்கின் முக்கிய தீர்ப்பை வழங்கியது. செல்லுபடியான பிரிவு 21 நோட்டீஸ் (Housing Act 1988 section 21(1) and (4)) வழங்கப்பட்ட வீட்டு உரிமையாளர் எரி வாயு (Gas) பாதுகாப்பு சான்றிதழை (Gas Safety Certificate) வாடகை தாரருக்கு வழங்கிய பின்னர் பிரிவு 21 நோட்டிஸிஸை வழங்கினால் போதுமானது.  இந்த தீர்ப்பு வீட்டு உரிமையாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் தீர்ப்பாக பார்க்கப்படுகிறது.

சட்டப் பின்னணி:

வீட்டுச் சட்டம் 1988 (Housing Act 1988) இன் கீழ் ஒரு வீட்டு உரிமையாளர் தனது வீட்டை வாடைக்கு கொடுக்கும் பொழுது வீட்டில் எரி வாயுவை பயன்படுத்தும் உபகரணம் இருக்குமாயின் அந்த உபகரணம் மற்றும் அதனுடன் தொடர்புடைய சேவையை ஒரு தகுதி வாய்ந்த எரி வாயு பொறியாளர் மூலம் ஆய்வு செய்து அனைத்தும் சரிவர செயல்படுகிறது மற்றும் பாதுகாப்பானது என்று சான்றிதழ் கொடுக்க வேண்டும். இந்த சான்றிதழ் பொதுவாக வாடகைதாரர் வாடகை வீட்டில் குடியேற முன்னர் அவருக்கு  கொடுக்கப்பட வேண்டும். இதன் மூலம் வாடகை தாரருக்கு வாடகை வீடு பாதுகாப்பானது என்று உறுதி செய்ய முடியும்.

பெரும்பாலான சூழலில் வீட்டு உரிமையாளர்கள் எரி வாயு பாதுகாப்பு சான்றிதழ்கள் தம் வசம் வைத்திருப்பினும் சில சந்தர்ப்பங்களில் அவர்கள் வீட்டை வாடகைக்கு கொடுக்கும் சூழலில் வாடைதாரருக்கு அந்த சான்றிதழை கொடுக்க தவறிவிடுகிறார்கள். இதன் காரணமாக வாடகைதாரருக்கு தான் இருக்கும் வீடு பாதுகாப்பானதா என்பது தெரியவருவதில்லை. பிரித்தானியாவில் இது தொடர்பாக  கடுமையான சட்டங்கள் இருந்தாலும் சில மோசமான வீட்டு உரிமையாளர்கள் இதை சரிவர செய்வதில்லை மற்றும் சிலர் இதைப்பற்றிய அறியாமையால் எரி வாயு பாதுகாப்பு சான்றிதழை பெற்று இருப்பதில்லை.

இருந்த பொழுதிலும் வாடகைதாரரை வெளியேற்றும் சூழல் வரும் பொழுது அவர்கள் சட்ட ஆலோசனை பெறும் பொழுது இந்த விடயங்கள் தெரிய வரும் பொழுது அவர்கள் அதன் பின்னர் எரி வாயு பாதுகாப்பு சான்றிதழ்களை பெறுவதும் உண்டு.  இவ்வாறான சூழலில் அவர்கள் பொதுவாக வீட்டை விட்டு வெளியேறக்கூறும் நோட்டீஸ் கொடுக்க முன்னர் இந்த சான்றிதழை வாடகை தாரருக்கு வழங்கிய பின்னர் நோட்டீஸ் (Section 21 notice) கொடுப்பது வழக்கம்.

நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்ட கேள்வி:

எரி வாயு பாதுகாப்பு சான்றிதழ் கொடுக்கப்படும் பொழுது வீட்டு உரிமையாளர் பல்வேறு சான்றிதழ் மற்றும் தகவல்களை வாடகை தாரருக்கு வழங்க வேண்டும். இதில் முக்கியமானதாக எரி வாயு பாதுகாப்பு சான்றிதழ் காணப்படுகிறது. இவ்வாறு ஒருவருக்கு வாடகைக்கு கொடுக்கப்படும் பொழுது குறிப்பிடப்பட்ட சான்றிதழ் கொடுக்காமல் வீட்டை விட்டு வெளியேறக்கூறும் நோட்டீஸ் கொடுக்க முன்னர் இதை கொடுக்கும் சூழலில் கொடுக்கப்பட்ட நோய்ட்ஸ் செல்லுபடியானதா என்ற கேள்வியே அது ஆகும்.

இந்த வழக்கில் வாடக்கை தாரரான பேட்ரிஸியா ரௌன்ஸ்பீல்ட் வீட்டில் குடியேற முன்னர் வீட்டு உரிமையாளரான டேராகாரெல் ஹவுஸ் எரி வாயு பாதுகாப்பு சான்றிதழை அவருக்கு கையளிக்க வில்லை. இருப்பினும் நோட்டீஸ் கொடுக்கப்பட முன்னர் அவருக்கு எரி வாயு பாதுகாப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டது. இதன் காரணமாக வாடகைதாரர் சார்பில் வீட்டு உரிமையாளர் கொடுத்த நோட்டீஸ் செல்லுபடியாகாது என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

நீதிமன்ற தீர்ப்பு:

இந்த வழக்க்கு லோர்ட் ஜஸ்டிஸஸ்  பாட்டன், கிங் மற்றும் மொய்லன் (Lord Justices Patten, King and Moylan) ஆகியோர் முன்னர் கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு கொண்டுவரப்பட்டது.  அந்த வேளையில் இரண்டு தரப்பும் தமது வாதங்களை நீதிமன்றத்தின் முன் வைத்திருந்தார்கள். அந்த வழக்கின் தீர்ப்பை இன்று நீதிமன்றம் வழங்கியது.

நீதிபதிகள் தீர்ப்பை வழங்கும் பொழுது தீர்ப்புக்கான தமது சொந்த சட்ட காரணங்களை தெரிவித்து இருந்தார்கள், ஆனால் அனைவரும்- பிரிவு 21 இன் கீழ் செல்லுபடியான நோட்டீஸ் கொடுக்கப்படுவதற்கு முன்னர் எரி வாயு பாதுகாப்பு சான்றிதழ் கொடுக்கப்பட்டு இருந்தால் கொடுக்கப்பட்ட பிரிவு 21 நோட்டீஸ் செல்லுபடியானது என்று தீர்ப்பளித்தார்கள்.

இந்த வழக்கு பலமாதமாக விசாரிக்கப்படுவதற்கும் விசாரிக்கப்பட்ட பின்னரும் நீதி மன்றத்தில் நிலுவையில்  இருந்த படியால் கீழ் நீதிமன்றகளில் பல வழக்குகள் இந்த சட்ட தெளிவின்மை காரணமாக விசாரணையை பிற்போட்டு இருந்தது. இந்த தீர்ப்பு இன்று வெளியானதால் மற்றைய வழக்குள் இனி வரும் காலங்களில் விரைவாக விசாரிக்கப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

கட்டுரையின் ஆசிரியர். திரு ஜெயராஜன் விஸ்வலிங்கம்

வழக்கறிஞர்

Jay Visva Solicitors, UK

பொறுப்புத் துறப்பு:

இந்த கட்டுரை நீதிமன்றத்தின் தீர்ப்பை விளக்குகிறது. இது உங்கள் தனிப்பட்ட சட்ட பிரச்சினைகளுக்கு கொடுக்கப்பட்ட ஆலோசனையாக அர்த்தம் கொள்ளக்கூடாது. உங்களுக்கு ஆலோசனை தேவைப்படின் ஒரு தகுதி வாய்ந்த சட்ட ஆலோசகரை நாடவும்.

Post a Comment