கடந்த சில வருடங்களில் ஒருவருக்கு நிரந்தரவதிவுருமை கிடைத்து இருக்குமாயின் உங்கள் பயோமெட்ரிக் அட்டை பெரும்பாலும் 31 டிசம்பர் 2024 இல் மமுடிவடையம் வகையில் கொடுக்கப்பட்டு இருக்கலாம். அதேவேளை 1 ஜனவரி 2022 இல் 5 வருட தற்காலிக வதிவுரிமை கொடுக்கப்பட்டு இருந்தாலும் உங்கள் பயோமெட்ரிக் அட்டை 31 டிசம்பர் 2024 இல் முடிவடையும் வகையில் கொடுக்கப்பட்டு இருக்கலாம்.
இவ்வாறு உங்களுக்கு பயோமெட்ரிக் அட்டை கொடுக்கப்பட்டு இருந்தால் வீசா குறிப்பிட்ட அளவு காலத்துக்கு முன்னரே முடிவடைகிறது என்று எண்ணி இது தொடர்பாக நீங்கள் கவலை கொண்டு இருக்கலாம். அப்படி இருப்பின் நீங்கள் கவலை கொள்ள வேண்டியதில்லை. பயோமெட்ரிக் அட்டை முன்னராக முடிவடைந்ததிலும் உள்ள வீசாவின் கால அளவு சட்டப்படி கொடுக்கப்பட்ட அளவு இருக்கும். இதன் அட்டை முடிவடைந்தாலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட சட்ட உரிமைகளில் எந்த சமரசமும் செய்யப்படாது.
இதற்கு முக்கிய காரணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய குடிவரவு ஆலோசனை ஆகும். ஐரோப்பிய ஒன்றிய புதிய தொழில் நுட்பத்தை அறிமுக படுத்திய காரணத்தால், அந்த தொழில் நுட்பம் தற்பொழுது பிரித்தானிய அரசு வழங்கும் பயோமெட்ரிக் அட்டையில் இல்லை. இதன் காரணமாவே இவ்வாறு குறிகிய காலத்துக்கு ஒருவரின் பயோமெட்ரிக் அட்டையின் முடியும் திகதி இருக்கிறது.
ஜனவரி 2021 இல் இந்த கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு, பிரித்தானிய புதிய பயோமெட்ரிக் அட்டைகளை வழங்க ஆரம்பித்துள்ளது.இதன் காரணமாக வீசா கால அளவுக்கு ஏற்றாப்போல் வழங்க ஆரம்பித்துள்ளது- நிரந்திரவதிவுரிமை உள்ளவர்களுக்கு 10 வருட கால அளவு உள்ள அட்டையும் குழந்தைகளுக்கு 5 வருட கால அளவு அட்டையும் வழங்கப்படுகிறது. இதே வேளையில் ‘view and prove your immigration status என்ற நிகழ் நிலை தகவலையும் வேகமாக நடைமுறை படுத்திவருகிறது.
Average Rating