Breaking News

உலகையே ஆச்சரியப்படவைத்த பிரித்தானிய இலங்கை தமிழர்கள்- 10 பில்லியன் சொத்துமதிப்பு எண்ணெய் சாம்பிராஜ்யம்

0 0

பிரித்தானியாவில் தமது கடுமையான உழைப்பாலும் நேர்த்தியான திட்டமிடலாலும் உலகில் உள்ள பல வணிக தொழில் அதிபர்களையும் the Times போன்ற பத்திரிகைகள் கூட வியந்து பாராட்டும் வைகையில் தமது எண்ணெய் சுத்திகரிப்பு வியாபாரத்தை மற்றுமொரு தளத்துக்கு எடுத்துச் சென்றுள்ளார்கள் திரு வின்ஸ்டன் சஞ்சீவ்குமார் சூசைப்பிள்ளை  (Winston Sanjeevkumar SOOSAIPILLAI) மற்றும் ஆரணி சூசைப்பிள்ளை (Arani Kumar Soosaipillai) தம்பதியினர்.

தமது வாழ்க்கையை ஒரு தொடர்மாடியில் உள்ள குடிமனையில் ஆரம்பித்த இவர்கள் தற்பொழுது பிரித்தானியாவில் உள்ள ரஷ்ய எண்ணெய் அதிபர்கள் உள்ள மிகவும் பாதுகாக்கப்ப்ட்ட வெய்ப்பிரிட்ஜ் (Weybridge) பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் வாழ்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இவர்களின் Prax நிறுவனம் தற்பொழுது 1250 ஊழியர்களையும் 11 அலுவலகங்களையும் உலகில் பல பகுதிகளில் வைத்துள்ளது என்று அவர்களின் இணையதளம் தெரிவிக்கிறது.

இவர்கள் சமீபத்தில் கொள்வனவு செய்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமே பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் பிரித்தானியாவில் உள்ள லிங்கன்ஷிய பகுதியில் உள்ள (Lindsey Oil Refinery) லிண்ட்ஸே ஒயில் ரிபைனறி ஆகும். இதை போல் பல எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை இவர்களின் நிறுவங்களில் ஒன்றான ப்ராஸ் (Prax) வாங்கி குவித்துள்ளதாக அறியவருகிறது. இவைகள் வாங்கி உள்ள பிரித்தானியாவியில் உள்ள மிகவும் விலை மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகும். இவர்கள் இப்பொழுது பிரித்தானியாவில் முதன்மை செல்வந்தர்களில்  குறிப்பித்தக்கவர்களாக அறியப்படுகிறார்கள். இதன் காரணமாக பலரின் பொறாமையையும் இவர்கள் சம்பாதித்து உள்ளதாக பிரித்தானிய பத்திரிகைகள் சில எழுதும் கட்டுரைகளில் இருந்து தெரியவருகிறது.

இப்படி இவர்கள் பெரும் செல்வந்தர்களாக  உருவெடுத்தாலும் இவர்கள் தொடர்பாக பலருக்கு வெறும் அடிப்படை தகவல்களை தவிர வெறும் ஒன்றும் தெரியவரவில்லை.

சஞ்சீவ் அவர்கள் பிரித்தானியாவில் உள்ள கென்ட் பல்கலைக்கழகத்தில் BA Honours, Accounting and Finance  படித்தவர் மேலும் அவர் ஒரு கணக்காளர் என்றும் 20 வருடமாக எண்ணெய் தொடர்பான வியாபாரத்தில் அனுபவம் உள்ளவர் என்று ஒரு சிறிய அறிமுகத்தை prax இணையதளத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது.

இவரின் மனைவி ஆரணி அவர்களும் அதே பல்கலைக்கழகத்தில் அவரை போன்றே கல்வி கற்றுள்ளார்-தொழிலார்கள் தொடர்பான நிர்வாகத்தை அவர் கவனித்து கொள்கிறார்-அவர் prax நிறுவனத்தில் இயக்குனராக இருந்து பதவி விலகியதாக தகவல் தெரிவிக்கின்றது. மேலும் Prax Foundation Roots தன்னார்வ தொண்டு நிறுவங்களின் செயல்பாடுகளையும் அவர் நிர்வகிப்பதாக தெரிவிக்கின்றது.

இலங்கையில் உள்ள அடம்பன் மற்றும் முருங்கன் ஆகிய பகுதிகளில் (orphanages at Adampan and Murunkan) தன்னார்வு நிலையங்களை நடத்தி வருகிறார்கள் என்று அவர்கள் இணையதளங்கள் தெரிவிக்கின்றது. இதை தவிர யாழ்ப்பாணத்தில் ஒரு சிறுவர் பாடசாலை மற்றும் திருகோணமையில் பல நலன் புரி சேவைகளை செய்வதாகவும் தெரிகிறது.

இவர்களின் மிகப்பெரிய வளர்ச்சி தமிழர்கள் பலருக்கு உத்வேகமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை, மேலும் இவர்களின் சாதனை தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் உள்ளதையும் எவராலும் மறுக்க முடியாது.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *