ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்த பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரித்தானியா ஆகிய இரண்டும் வித்ட்ராவல் ஒப்பபந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு இணங்க செட்டில்மென்ட் மற்றும் ப்ரீசெட்டில்மென்ட் என்ற வீசா முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஐந்து வருடங்களுக்கு குறைவாக பிரித்தானியாவில் இருப்பவர்கள் மற்றும் புதிதாக வித்ராவல் ஒப்பந்தத்தின் கீழ் பிரித்தானிய வீசா பெறுபவர்கள் ப்ரீசெட்டில் வீசா பெறுவார்கள். ஐந்து வருடங்கள் கழித்து செட்டில்மென்ட் வீசா (நிரந்தர வதிவுரிமை பெறுவார்கள்).
அண்மையில் ஐந்து வருட வீசா முடிவடைந்து ஒருவரின் வீசாவை பிரித்தானிய உள்துறை அமைச்சு மறுத்து இருந்தது. இதை எதிர்த்து The Independent Monitoring Authority மேல் முறையீடு செய்து இருந்தது. வித்ட்ராவல் ஒப்பந்தத்தின் கீழ் வீசா பெறுபவர்களின் வீசா குடிவரவு சட்டத்தின் கீழ் வீசா பெறுபவரின் உரிமைகள் போல் முடிவுக்கு வராது என்று The Independent Monitoring Authority வாதிட்டது. இந்த வாதத்தை பிரித்தானிய உயர் நீதிமன்றம் மேல்முறையீட்டை The Independent Monitoring Authority சார்பாக தீர்ப்பு கூறியது.
இந்த வழக்கை கோர்ட் ஒப் அப்பீளுக்கு பிரித்தானிய உள்துறை அமைச்சு மேல் முறையீட்டு செய்துள்ளது. இதன் முடிவு வரும் வரை உண்மையான சட்ட நிலை குழப்பமாக இருக்கும்.
இவ்வாறு சிக்கலான சூழலை தவிர்ப்பதற்கு வீசா முட்டிவதர்க்கு முன்னர் விண்ணப்பிப்பது அவசியமாகிறது.
Average Rating