தற்பொழுது உள்ள EU Settlement Scheme Family Permits இன் கீழ் ஐரோப்பிய குடியுரிமையை பெறாத வெளிநாட்டவர் தனது நெருங்கிய ஐரோப்பிய ஒன்றிய குடிமகனோடு ப்ரேசிக்ஸிட் இடம் பெறுவதற்கு முன்னர் உள்ள சட்டத்தின் கீழ் இணைய முடியும்.
சட்ட தகமை
1. இருவருக்கும் உள்ள உறவு 31 டிசம்பர் 2020 முன்னர் ஏற்பட்டதாக இருக்க வேண்டும்.
2. பிரித்தானியாவில் உள்ள உறவினர், ஐரோப்பிய குடியிருமை உள்ளவர், Settled Status அல்லது Pre-Settled Status, அல்லது இவற்றுக்கு விண்ணப்பம் செய்து முடிவுக்கு காத்திருக்க வேண்டும்.
3. விண்ணப்பதாரி விண்ணப்பம் செய்து ஆறு மாதத்துக்குல் ஐரோப்பிய ஒன்றிய குடிமகனுடன் பயணிக்கவேண்டும் அல்லது இணைய வேண்டும்.
யார் விண்ணப்பிக்க வேண்டும்-தகமை என்ன?
ஐரோப்பிய ஒன்றிய கணவன் அல்லது மனைவி (Spouse of a relevant EEA citizen);
ஒருபால் திருமணம் செய்த ஐரோப்பிய இன்றிய துணை (Civil partner of a relevant EEA citizen);
ஐரோப்பிய ஒன்றிய குடிமகனின் நீண்ட கால துணை (Durable partner of a relevant EEA citizen);
ஐரோப்பிய ஒன்றிய குடிமகனின் குழந்தை, அல்லது பேரப்பிள்ளை, பூட்டப்பிள்ளை (Child (or grandchild or great-grandchild) of a relevant EEA citizen or of their spouse or civil partner);
ஐரோப்பிய ஒன்றிய குடிமகனை தங்கி உள்ள பெற்றோர் (Dependent parent (or grandparent or great-grandparent) of the relevant EEA citizen or of their spouse or civil partner) மற்றும்
உங்கள் உறவு 31 டிசம்பர் 2020 க்கு முன்னர் ஆரம்பித்தது என்பதை நிரூபிக்க வேண்டும்.
EEA Family Permit தற்பொழுது நடைமுறையில் இல்லை என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.
EU SETTLEMENT SCHEME FAMILY PERMIT க்கு விண்ணப்பம் செய்பவர் உள்துறை அமைச்சுக்கு எந்த கட்டணத்தையும் செலுத்த தேவை இல்லை-இது தற்பொழுதும் இலவசம் ஆகும். அதேவேளை விண்ணப்பம் பிரித்தானியாவிக்கு வெளியில் இருந்து விண்ணப்பிக்க வேண்டும்.
30 ஜூன் 2021 க்கு பின்னர் விண்ணப்பம் செய்யப்பட்டால், விண்ணப்பம் அனுமதிக்கப்படும் பட்சத்தில் வீசா 4 மாதங்கள் செல்லுபடியாகும். பிரித்தானியாவில் தொடர்ந்து வாழ விரும்பினால் EU SETTLEMENT SCHEME க்கு கீழ் விண்ணப்பிக்க வேண்டும்.
இது தொடர்பாக ஆலோசனை தேவைப்படின் ஒரு சட்ட தகமை மற்றும் அனுமதி பெற்ற ஆலோசகரை நாடுவது கட்டாயமாகிறது.
Average Rating