Subscribe to Our Newsletter


Latest News
Image Alt

Law in Tamil

Parking Charge Noticeக் எதிராக மேல் முறையீடு செய்வது எப்படி? பகுதி-1

Parking Charge Notice என்றால் என்ன?

நீங்கள் தனியார் வாகன தரிப்பிடங்களில் உங்கள் வாகனம் தரித்து நிக்கும் பொழுது கொடுக்கப்படும் Parking Charge Notice இற்கும் பொது வீதிகளில் உள்ளூராட்சிகளால் கொடுக்கப்படும் Penalty Charge Notice இற்கும் வேறுபாடுகள் உள்ளன. நீங்கள் தனியார் வாகன தரிப்பிடங்களின் தனியார் சட்டங்களை பின்பற்றாமல் வாகனத்தை நிறுத்தும் பொழுது அவர்கள் உங்களிடம் தண்டனைத் தொகையை அறவிடலாம். இது Parking Charge Notice ஆகும்.

One parking warden writing a ticket for a parking violation

உங்களுக்கு இந்த அறிவிப்புகள் (Notice) கிடைக்கும் பொழுது இவைகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்யம் முறை முற்றிலும் வேறுபட்டது. மேலும் தனியார் வாகன தரிப்பிடங்கள் மேல் முரையீடு செய்யும் முறையை தெளிவு படுத்துவது இல்லை.

நீங்கள் தனியார் வாகன தரிப்பிடங்களில் ஒரு வாகனத்தை நிறுத்துவதன் மூலம் நீங்கள் அந்த வாகனம் DVLA இல் பதிவு செய்யப்பட்ட உரிமையாளருக்கும் தனியார் வாகன தரிப்பிட உரிமையாளர்களுக்கும் உங்களை அறியாமலே ஒப்பந்தந்தை ஏட்படுத்துகிறீர்கள்.

இந்த தனியார் வாகன தரிப்பிடங்கள் பொதுவாக பின்வரும் இடங்களில் காணப்படும்:
விமான நிலையம்,புகையிரத நிலையம் மற்றும் வியாபார ஸ்தாபனங்கள்.

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை

Closeup of city parking notice fastened to brick wall.

1. எதிர்பாராத விதமாக நீங்கள் parking notice பெற்றால் இது மஞ்சள் நிற சிறிய பையில் வைத்து உங்கள் வாகனத்தின் முன் கண்ணாடியில் ஒட்டப்பட்டு இருக்கும். இது Parking Charge Notice என்று எழுதப்பட்டு இருக்கும். நீங்கள் ஏன் தரிப்பிட விதிமுறையை மீறினீர்கள் என்றும் இது கூறும்.

2. வாகன தரிப்பிட நடத்துனர் British Parking Association அல்லது International Parking Committee போன்றவற்றில் அங்கத்தவராயின் உங்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனைச் சீட்டில் கூறப்பட்டு இருக்கும். இது எப்படி மேல் முறையீடு செய்வது என்றும் கூறும்.

 

3. உங்கள் வாகனம் இருகப்பற்று இருந்தால் (clamp) அது சட்டத்துக்கு விரோதமான செயலாகும். இப்படி செய்வது இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்காட்லாந்து போன்ற பிரித்தானியாவின் பகுதிகளில் 2012 இல் இருந்து சட்ட விரோதம். இப்படிச் செய்யப்பட்டு இருந்தால் நீங்கள் காவல் துறையை உதவிக்கு அழைக்கலாம்.

4. அந்த இடத்தில் உங்களை தண்டப்பணம் கட்டச் சொன்னால் நீங்கள் காவல் துறையை அழைக்கலாம்.

car wheel tire with yellow boot in parking lot close up

5. நீங்கள் வாகனத்தை நிறுத்தும் இடத்தில் உள்ள அறிவிப்புகளை கவனமாக வாசிக்கவும். இந்த அறிவிப்புகள் தெளிவில்லை என்றாலும் அல்லது உங்கள் கண்ணுக்கு எட்டாத தூரத்தில் வைக்கப்பட்டிருந்தாளும் இப்படிப்பட்ட விடயங்கள் உங்கள் மேல் முருறையீட்டிற்கு உதவும்.

6. நீங்கள் வாகனத்தை நிறுத்தும் பொழுது உங்கள் வாகனத்திற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் எந்த எல்லைக் கோட்டிலும் படாமல் நிருத்த வேண்டும்.

 

7. நீங்கள் ஊனமுற்றவர்களுக்கான நீல அட்டை இருந்தால் மட்டுமே ஊனமுற்றவர்களுக்கான இடத்தில் வாகனத்தை நிறுத்தலாம்.

8. நீங்கள் வாகனத்தை நிறுத்த அனுமதிக்கப்பட்ட கால அளவை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். பணம் செலுத்த வேண்டுமென்றால் தேவையான அளவு பணத்தை செலுத்துங்கள் மேலும் உங்கள் கைத்தொலைபேசியில் உள்ள கடிகாரத்தில் நேரத்தை குறித்து வைத்தல் ஆலோசனைக்குரியது.

9. வாகனத்தை நிறுத்தும் பொழுது உங்கள் சீட்டு முடிவடைந்த நேரத்துக்கும் Parking Notice வழங்கப்பட்ட நேரத்துக்கும் 10 நிமிட கருணை நேரம் இங்கிலாந்தில் உள்ளூராட்சிகள் கொடுக்கின்றது.

Swansea, UK: June 2017: Sainsburys Car Parking Sign stating the terms and conditions of use and how much the fine is if over staying the two hour maximum limit. Horizon Parking are able to fine overstayers 60.

10. தனியார் நிறுவனங்கள் நீங்கள் ஒரு நிமிடம் தாமதமாக சென்றாலும் தண்டனை சீட்டுக்களை கொடுக்கிறார்கள். ஆனால் தனியார் வாகன தரிப்பு நிறுவனங்கள் British Parking Associationஇல் அங்கத்தவராயின் 10 நிமிடம் கொடுக்கப்படவேண்டும். உங்கள் parking ticket முடிந்த நேரத்துக்கும் உங்களுக்கு parking notice கொடுக்கப்பட்ட நேரத்துக்கும் 10 நிமிடத்திற்கும் குறைவாக இருந்தால் நீங்கள் மேல்முறையீடு செய்வதற்கு இது ஒரு நல்ல காரணமாகும்.

மேல் முறையீடு செய்வது எப்படி?

தொடரும் …

Post a Comment