Breaking News

இங்கிலாந்தில் தமது வீட்டை உறவினர் இல்லாதவரோடு அனுமதி இல்லாமல் பகிர்ந்தால் £30,000 வரை அபராதம்.

1 0

1ஆம் திகதி அக்டோபர் 2018இல் இருந்து இங்கிலாந்தில் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய சட்டம் அமுலுக்கு வருகின்றது. இந்தச் சட்டத்தின் படி  The Licensing of Houses in Multiple Occupation (Prescribed Description) (England) Order 2018 முன்பு இருந்த ஒன்றுக்கு மேலான உறவினர் இல்லாத நபர்கள் வாழ்கின்ற வீடுகளுக்கு (house in multiple occupation) உரிய சட்டத்தில்  மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

 

முன்பு இருந்த சட்டமானது மூன்று தகமைகள் இருந்தால் ஒரு வீடு HMO ஆக கருதப்படும்:

 

  1. ஒரு இல்லமானது ஒருவருக்கு ஒருவர் உறவினர் இல்லாத நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு இருந்தால் அது பின்வரும் சந்தர்ப்பங்களில் HMO வாக கருதப்படும்:

 

  1. இல்லமானது 5 அல்லது அதற்கு மேலானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது; மேலும்

 

  1. வீடானது மூன்று அல்லது தற்கு மேலான மடிகளைக் கொண்டது; மேலும்
  2. குறைந்தது ஒருவர் குளியல் அரை மற்றும் சமையலறை போன்றவற்றை அவர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் வாடகை செலுத்த வேண்டும்

இப்படி இருக்கும் பட்சத்தில் வீட்டு உரிமையாளர் அதற்குரிய அனுமதியை உள்ளாட்சியிடம் இருந்து பெற வேண்டும்.

ஆயினும் அக்டோபர் 1இல் இருந்து வரும் சட்டமானது வீடானது மூன்று அல்லது தற்கு மேலான மாடிகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற தேவையை நீக்கி இருக்கிறது  புதிய சட்ட அறிமுகப் படுத்தியத்தின் மூலம் சுமார்  160,000 வீடுகளுக்கு இங்கிலாந்தில் உரிமம் பெறவேண்டி இருக்கும்.

புதிய சட்டமானது, வீட்டின் அறைகளின் அளவுகளுக்கும் பின்வரும் சட்டமாற்றத்தை அறிமுகப்படுத்தி உள்ளது:

  1. வயது வந்தவர் ஒருவருடைய அறையானது குறைந்த பட்சம் 6.51 சதுர மீட்டர் ஆக இருக்க வேண்டும்.
  2. இரண்டு வயது வந்தவர்களுக்குரிய அறையானது குறைந்த பட்சம் 10.22 சதுர மீட்டர்களாக இருக்க வேண்டும்.

 

  1. குழந்தை ஒன்றுக்காண அறையானது குறைந்த பட்சம் 4.64 சதுர மீட்டர் ஆக இருக்க வேண்டும்.

இந்த சட்டத்துக்குல்  வருகின்ற வீடுகளின் உரிமையாளர்கள் 30 செப்டம்பர் 2018இக்குல் முன்னர் அனுமதியை பெற்று இருக்க வேண்டும். அப்படி பெறவில்லை என்றால் அவர்கள் £30,000 பிரித்தானிய பவுண்டுகள் வரை தண்டனைத் தொகையாக செலுத்த வேண்டி வரும்.

இந்த அனுமதியை பெறுவதற்கு உள்ளூர் ஆட்சிகள் £500 இல் இருந்து £1500 வரை கட்டணமாக அறவிடுகின்றன.

இந்தச் சட்டமானது வீடுகளில் அதிகமான நெரிசலை குறைப்பதற்காக கொண்டு வரப்பட்டுள்ளது.

தொடர்ந்து HMO ஆக தமது வீட்டை பயன்படுத்த விரும்புவோர் உடனடியாக அனுமதியை பெறவேண்டும்.

மேலதிக கால அளவு அறைகளின் அளவை மாற்றி அமைப்பதற்க்கு மட்டுமே வழங்கப்படும் என்று நம்பப் படுகிறது

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *