ஒருவரின் குடிவரவு விண்ணப்பம் பல காரங்களுக்காக உள்துறை அமைச்சின் முடிவில்லாமல் அரசு குடிப்பிட்ட காலத்துக்கு மேலாக நிலுவையில் இருக்கலாம்; அவ்வாறு இருப்பின் பலருக்கு எவ்வாறு உள்துறை அமைச்சை தொடர்பு கொள்வது என்பதை இங்கே ஆராயலாம்.
ஒருவர் உள்நாட்டில் இருந்து விண்ணப்பித்தார அல்லது வெளிநாடு ஒன்றில் இருந்து விண்ணப்பிக்கின்றாரா என்பதை வைத்து ஒருவர் உள்துறை அமைச்சை தொடர்புகொள்ளும் விதம் மாறுபடும்.
1. உள்நாட்டில் இருந்து தொடர்புகொள்ள இந்த இணைப்பை அழுத்தவும்
2. வெளிநாட்டில் இருந்து தொடர்பு கொள்ள இந்த இணைப்பை அழுத்தவும்
3. பொதுவாக ஒருவரின் விண்ணப்பம் அரசு அறிவித்த பரிசீலிக்கப்படும் கால அளவை பற்றி தெரிந்து கொள்ள இந்த இணைப்பை பற்றி தெரிந்து கொள்ள இந்த இணைப்பை அழுத்தவும்
4. முடிவெடுக்க எவ்வளவு கால தாமதம் ஆகும் என்பதை தெரிந்து கொள்ள இந்த இணைப்பை அழுத்தவும்– எடுத்துக்காட்டாக தனது கணவன் அல்லது மனைவி தனது துணைவருடன் இணைய மேற்கொள்ளும் விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் கால அளவு 12 வாரமாக இருந்தது, இப்பொழுது 24 வாரமாக உயத்தப்பட்டு உள்ளது.
இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், உங்கள் காத்திருக்கும் கால அளவு விண்ணப்ப தாரி பயோமெட்ரிக் தகவல் நேர்காணலுக்கு சென்ற நாளில் இருந்தே ஆரம்பிக்கும் என்பதை மனதில் கொள்வது முக்கியம்.
மேலே குறிப்பிட்ட கால அளவிற்கு மேலே ஒருவரின் விண்ணப்பம் தாமதமாகி அவர்களை தொடர்பு கொண்டும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் பின்வரும் இணைப்பை அழுத்தி முறைப்பாடு செய்யலாம்.
1. online form.
3. complaints@homeoffice.gov.uk.
உள்துறை அமைச்சுக்கு முறைப்பாடு செய்தால் சுமார் 20 வேலை நாட்கள் ஒருவர் காத்து இருக்க வேண்டும்.
மிகவும் பாரதூரமான முறைப்பாடுகளை ஆய்வு செய்ய 12 கிழமைகள் எடுக்கலாம்.
உங்கள் மேலே குறிப்பிட்ட குறைபாடுகளுக்கும் பதில் இல்லை என்றால் உங்கள் நாடாளுமன்ற உறுப்பினரை நாடலாம். அதிலும் பலனளிக்கவில்லை என்றால் Complain to the Parliamentary and Health Service Ombudsman க்கு முறைப்பாடு செய்யலாம்.
அதற்கும் பயன் இல்லை என்றால் ஜூடிசில் ரெவியூ (judicial Review)-அதாவது உயர் நீதிமன்றத்துக்கு (அல்லது ட்ரைபுனல் ) முறைப்பாடு செய்யவேண்டும்
Average Rating